Be glad and rejoice, For the LORD has done marvelous things! Joel 2:21
In this verse, the prophet Joel told the people of Israel to rejoice and be glad for the great things that God has done, when they returned to Him. They faced a lot of problems like drought, plagues and poor harvests as they were not following the ways of God. In the same way, if we follow the wicked ways of this world, we lose love, joy and peace. But when we walk according to the word of God, God will restore all the good things that we lost and make us glad and to rejoice. God is expecting us to worship Him and sing praises to Him as He has done wonderful things in our lives. Shall we also sing along with the Psalmist saying, 'I will be glad and rejoice in you; I will sing the praises of your name, O Most High.'
மகிழ்ந்து களிகூரு, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
யோவேல் 2:21
இந்த வசனத்தில், யோவேல் தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மிடம் திரும்பியபோது, தேவன் செய்த பெரிய காரியங்களுக்காக மகிழ்ந்து சந்தோஷப்படுங்கள் என்று கூறினார். அவர்கள் கடவுளின் வழிகளைப் பின்பற்றாததால் வறட்சி, கொள்ளை நோய் மற்றும் மோசமான அறுவடை போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். அதுபோலவே, இவ்வுலகின் பொல்லாத வழிகளைப் பின்பற்றினால், அன்பையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் இழக்கிறோம். ஆனால் நாம் தேவனுடைய வார்த்தையின்படி நடக்கும்போது, நாம் இழந்த எல்லா நன்மைகளையும் தேவன் மீட்டெடுத்து நம்மை மகிழ்விப்பார். அவர் நம் வாழ்வில் அற்புதமான காரியங்களைச் செய்திருப்பதால், நாம் அவருக்கு ஆராதனை செய்து, அவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். நாமும் சங்கீதக்காரனுடன் சேர்ந்து பாடி அவரைப்போல், 'உம்மில் மகிழ்ந்து களிகூருவேன், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.' என்று சொல்லுவோமா!.
Comments
Post a Comment