There are many people in the world seeking peace by visiting sacred places. However, we know that Jesus Christ, the Prince of Peace and the Peace Maker, sacrificed His life to give us peace in this destructive world. Today’s verse provides four key steps to attain that peace. First, turning away from wrongdoing; second, doing good deeds; third, seeking peace; and fourth, pursuing peace. When we extend kindness to those who wrong us, we not only find favor in the eyes of God but also transform into peacemakers. In His teachings on the mountain, Jesus said, "Blessed are the peacemakers, for they will be called children of God." When we abide in Him and do His will, we are actively seeking His perfect peace and striving to attain it. The Psalmist affirms, "Great peace belongs to those who love your law, and nothing can make them stumble."
Depart from evil and do good; Seek peace and pursue it. Psalm 34:14.
தீமையை விட்டு விலகி, நன்மை செய், சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். சங்கீதம் 34:14
இந்த உலகில், புனிதத் தலங்களுக்குச் சென்று அமைதியை நாடும் பலர் உள்ளனர். இருப்பினும், சமாதானப்பிரபு மற்றும் சமாதானம் கொடுப்பவராகிய இயேசு கிறிஸ்து இந்த அழிந்துபோகிற உலகில் நமக்கு சமாதானத்தை வழங்குவதற்காக தனது உயிரையே தியாகம் செய்தார் என்பதை நாம் அறிவோம். அந்த சமாதானத்தை அடைவதற்கு இன்றைய வசனம் நான்கு முக்கிய படிகளை வழங்குகிறது. முதலாவதாக, தீமையை வட்டு விலகிச் செல்வது; இரண்டாவது, நல்ல செயல்களைச் செய்தல்; மூன்றாவது, சமாதானத்தைத் தேடுதல்; மற்றும் நான்காவது, சமாதானத்தை பின்தொடர்வது. நமக்குத் தவறு செய்பவர்களுக்கு நாம் இரக்கம் காட்டும்போது, கடவுளின் பார்வையில் நாம் தயவைக் காண்பது மட்டுமல்லாமல், சமாதானம் செய்பவர்களாகவும் மாறுகிறோம். இயேசு மலைப்பிரசங்கத்தில் தம்முடைய போதனைகளில், "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்." என்று கூறினார். நாம் அவரில் நிலைத்திருந்து, அவருடைய சித்தத்தைச் செய்யும்போது, அவருடைய பரிபூரண சமாதானத்தை தீவிரமாகத் தேடுகிறோம், அதை அடையவும் முயற்சி செய்கிறோம். இதை சங்கீதக்காரனாகிய தாவீது ராஜா, "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை." என்று உறுதிப்படுத்துகிறார்.
Comments
Post a Comment