உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி, அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3
ஒவ்வொரு நாளும், நாம் கடவுளிடம் ஜெபித்து, நம் நாளைத் தொடங்குகிறோம். இருப்பினும், பல நேரங்களில், நாம் பல்வேறு விஷயங்களில் நம்பிக்கையாயிருக்கிறோம். இன்றைய வசனம் நம்முடைய வழிகளையும், நம்முடைய செயல்களையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கச் சொல்கிறது. நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட வழிகளில் அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நம்முடைய முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார். ஒவ்வொரு நொடியும் ஜெபத்தில் நமது பிரச்சனைகள், கவலைகள், சந்தேகங்கள், தோல்விகள், தேவைகள், திட்டங்கள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் கடவுளிடம் கொடுப்பதை; இது குறிக்கிறது. அனைத்திற்கும் தீர்வு காணவும், அவரில் மட்டுமே நம்பிக்கை வைக்கவும் கடவுளின் வார்த்தையின் மூலம் நாம் அவரைத் தேட வேண்டும். நாம் தாவீதோடு மீண்டும், "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." என்று சொல்லுவோம்.
Comments
Post a Comment