Heaven and earth will pass away, but My words will by no means pass away. Luke 21:33
The world we live in is filled with problems and chaos. Everything in the world has its limitations. There is no lasting peace in the world. However, today's verse reminds us that even heaven and earth may fade away, but His words will endure forever. The Bible says, "The grass withers, the flower fades, but the word of our God will stand forever." This means that regardless of the weariness and frustration caused by the events around us, His word remains constant. So HIs Word is worth holding onto in times of difficulties. Let us echo the words of Peter, a disciple of Jesus, who said, "But the word of the Lord endures forever. Now this is the word which by the gospel was preached to you."
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. லூக்கா 21:33
நாம் வாழும் உலகம் பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள் நிறைந்தது. உலகில் உள்ள அனைத்திற்கும் அதன் வரம்புகள் உள்ளன. உலகில் நிலையான அமைதி இல்லை. வானமும் பூமியும் கூட மறைந்து போகலாம், ஆனால் அவருடைய வார்த்தைகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை இன்றைய வசனம் நமக்கு நினைவூட்டுகிறது. "புல் உலர்ந்து பூ உதிரும், நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்." என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளால் ஏற்படும் சோர்வு மற்றும் விரக்தியைப் பொருட்படுத்தாமல், அவருடைய வார்த்தை நிலையானது என்பதே இதன் பொருள். எனவே கஷ்டமான நேரங்களில் அவரது வார்த்தைகளைப் பிடித்துக் கொள்வதே தகும். இயேசுவின் சீடரான பேதுருவின் வார்த்தைகளை நாம் அவரோடு சொல்லுவோம், "கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே."
ReplyForward |
Comments
Post a Comment