"Arrival of King Jesus"
A Star shall come out of Jacob; A Scepter shall rise out of Israel. Numbers 24:17
In today's verse, two words, 'Star' and 'Scepter' are associated with kingship. These words were foretold by prophets in the Old Testament concerning the arrival of King Jesus. He hails from Judah, a tribe of Israel, and is described as the Ruler, Lord, and King. He arrived not in a palace, but in a manger. His purpose was not to rule nations, but to destroy the kingdom of darkness through His death and resurrection. Now, He is going to return as the King of Kings, ruling nations forever. Are you ready? In the book of Hebrews, it declares, "Your throne, O God, is forever and ever; A scepter of righteousness is the scepter of Your kingdom."
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும். எண்ணாகமம் 24:17
இன்றைய வசனத்தில், 'நட்சத்திரம்' மற்றும் 'செங்கோல்' என்ற இரண்டு வார்த்தைகள் அரசாட்சியுடன் தொடர்புடையவை. இந்த வார்த்தைகள் ராஜா இயேசுவின் வருகையைப் பற்றி பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டவை. அவர் இஸ்ரவேலின் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர், மேலும் அவர் ஆட்சிசெய்பவர், இறைவன் மற்றும் ராஜா என்று விவரிக்கப்படுகிறார். அவர் பிறந்தது அரண்மனையில் அல்ல, ஆனால் ஒரு மாட்டு தொழுவத்தில் பிறந்தார். அவரது நோக்கம் தேசங்களை ஆளுவது அல்ல, மாறாக அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இருளின் அந்தகார ராஜ்யத்தை அழிப்பதாகும். இப்போது, அவர் ராஜாதி ராஜாவாக, என்றென்றும் நாடுகளை ஆளுபவராகத் திரும்பி வரப்போகிறார். நீங்கள் ஆயத்தமா? எபிரேயர் புத்தகத்தில், அது அறிவிக்கப்பட்டிருக்கிறது,"தே வனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது."
Comments
Post a Comment