"Call upon Me in the day of trouble" - The Lord.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.சங்கீதம் 34:19.
ஒவ்வொரு நாளும் நாம், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம், ஆனால் சில நாட்கள் கரடு முரடானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். எப்போதாவது, நாம் அந்த நாள் வரும்பொழுது அதை வெறுக்கிறோம், அவை ஏன் வருகின்றன என்று வியப்படைகிறோம். கிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகு, அதிக சவால்களை எதிர்கொள்கிறோம் என்று பலர் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கிறிஸ்துவில் நாம் சமாதானத்தைக் காணலாம் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. இந்த உலகில், நாம் உபத்திரவத்தை அனுபவிப்போம், ஆனால் அவர் உலகத்தை ஜெயித்ததால், நாம் தைரியமாக இருக்கும்படி அவர் நம்மை ஊக்குவிக்கிறார். நாம் அவர்மீது நம்பிக்கை வைத்தால், அவர் எல்லா சோதனைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்து, வெற்றிபெற உதவுவார். சங்கீதம் 50:15 -ல், தாவீது ராஜா கூறுகிறார், “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”.
Comments
Post a Comment