"Do not hold on to anger."
Be angry, and do not sin. Meditate within your heart on your bed, and be still. Psalm 4:4.
Today’s verse talks about one of the limitations of human nature. At times, we get upset over things we don't like. People speak in ways that trigger anger. The natural tendency is to release the pressure built up within us through anger. However, it doesn't stop there, as we don't get angry in isolation; we get angry at people. Now, there are plenty of chances that our anger turns into sin, as it can damage relationships, inflict wounds and scars on hearts, and even result in violent behavior. This verse tells us that when you get angry, go to your bed, lie down, and meditate in your heart. This act of obedience to the scripture helps reduce our pressure and increases the possibility of not committing sin. Finally, do not hold on to anger, and don't let anger motivate you to sin. In Ephesians 4:26, Apostle Paul says, "Be angry, and do not sin: do not let the sun go down on your wrath."
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். சங்கீதம் 4:4.
இன்றைய வசனம் மனித தன்மையைக் கட்டுப்படுத்தும் ஒன்றைப் பற்றி பேசுகிறது. சில சமயங்களில், நமக்குப் பிடிக்காத விஷயங்களுக்காக மனமகிழ்ச்சியின்றி இருக்கிறோம். மக்கள் கோபத்தைத் தூண்டும் விதத்தில் பேசுகிறார்கள். கோபத்தின் மூலம் நமக்குள்ளிருக்கும் மன அழுத்தத்தை வெளியிடுவதே இயற்கையான போக்கு. இருப்பினும், தனிமையில் நாம் கோபப்படுவதில்லை என்பதால், அது அங்கு நிற்காது; நாம் மற்றவர்கள் மீது கோபப்படுகிறோம். இப்போது, நமது கோபம் பாவமாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, ஏனெனில் அது உறவுகளை சேதப்படுத்தும், இதயங்களில் காயங்கள் மற்றும் வடுக்களை ஏற்படுத்தலாம் மற்றும் வன்முறை காரியங்களுக்குக் கூட வழிவகுக்கும். நீங்கள் கோபம் கொண்டால், படுக்கைக்குச் சென்று, படுத்து, உங்கள் இதயத்தில் தியானம் செய்யுங்கள் என்று இந்த வசனம் நமக்குச் சொல்கிறது. வேதத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் நமது மன அழுத்தத்தைக் குறைத்து, பாவம் செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்பைக் கூட்டமுடியும். இறுதியாக, கோபத்தைப் பிடித்துக் கொள்ளாதீர்கள், கோபம் உங்களைப் பாவம் செய்யத் தூண்ட வேண்டாம். எபேசியர் 4:26 -ல், பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார், “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”
Comments
Post a Comment