"Jesus' shed blood symbolizes the ultimate cleansing from sin."

Purge me with hyssop, and I shall be clean; Wash me, and I shall be whiter than snow. Psalm 51:7.

In today's verse, King David asks God to cleanse him with hyssop, and he declares that if the Lord washes away his sin, he will be clean and whiter than snow. He doesn't refer to hyssop for physical cleansing—rather, he is asking God to cleanse him spiritually as he confesses his sin. Hyssop is also used symbolically in the Bible. When the Israelites marked their doorposts with lamb’s blood for the angel of death to pass over them, God instructed them to use a bunch of hyssop as a “paintbrush.” During the crucifixion of Jesus, hyssop was used to offer sour wine to Jesus while He was on the cross. This act symbolizes Jesus' role in purifying our sins through His sacrifice on the cross. Just as hyssop was used in the Old Testament for purification rituals, Jesus' shed blood symbolizes the ultimate cleansing from sin for all who believe in Him. In Psalm 51:2, David says, "Wash me thoroughly from my iniquity, And cleanse me from my sin."

நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். சங்கீதம் 51: 7.

இன்றைய வசனத்தில், தாவீது ராஜா தன்னை ஈசோப்பினால் சுத்தப்படுத்தும்படி தேவனிடம்  கேட்கிறார், மேலும் அவர் தனது பாவத்தை இறைவன் கழுவினால், அவர் வெண்பனியை விட சுத்தமாகவும் வெண்மையாகவும் இருப்பார் என்று சொல்லுகிறார். அவர் உடல் சுத்திகரிப்புக்காக ஈசோப்பைக் குறிப்பிடவில்லை - மாறாக, அவர் தனது பாவத்தை ஒப்புக்கொள்கையில் தன்னை ஆன்மீக ரீதியில் சுத்தப்படுத்தும்படி தேவனிடம் கேட்கிறார். வேதாகமத்தில் ஈசோப்பு  ஒப்பனையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்கள் தங்கள் வீட்டு வாசற்படிகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் அடையாளப்படுத்தியபோது, ​​மரணத்தின் தூதன் அவர்களைக் கடந்து செல்வதற்காக, தேவன்  ஒரு கொத்து ஈசோப்பை  "பெயின்ட்பிரஷ்" போலப்  பயன்படுத்த அறிவுறுத்தினார். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, ​​​​தாகத்துக்காக அவருக்கு, அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள் (யோவான் 19:29). சிலுவையில் தன்னை  பலியாகக்  கொடுத்ததின் மூலம் நம்முடைய பாவங்களைச் சுத்திகரிப்பதில் இயேசுவின் பங்கை இந்தச் செயல் அடையாளப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் சுத்திகரிப்பு சடங்குகளுக்கு ஈசோப்பு பயன்படுத்தப்பட்டது போலவே, இயேசு சிலுவையில்  சிந்தின இரத்தம் அவரை விசுவாசிக்கும்  அனைவருக்கும் பாவத்திலிருந்து விடுதலை கொடுக்கும்  சுத்திகரிப்பைக் குறிக்கிறது. சங்கீதம் 51:2 -ல் தாவீது, “என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.” என்று கூறுகிறார்.


Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"