"Transform to Reflect as children of God"
Today's verse says that we are God's masterpiece; God planned for us to do good things and to live as He has always wanted us to live. This is why God sent Christ to make us what we are. We were born spiritually dead in our sins, living in pain and darkness, but now we have a new life through the work of Jesus on the cross. This transformation allows us to live in a way that reflects our true identity as children of God. God has not only created us as His handiwork, but He has also prepared a unique path for each of us to follow, filled with opportunities for service and spiritual growth. In Ephesians 4:24, Apostle Paul says, "And to put on the new self, created to be like God in true righteousness and holiness."
நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் 2:10.
நாம் தேவனின் தலைசிறந்த படைப்பு என்று இன்றைய வசனம் கூறுகிறது; நாம் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும், நாம் எப்போதும் அவர் விரும்பியபடி வாழ வேண்டும் என்றும் தேவன் திட்டமிட்டார். இதனாலேயே தேவன் கிறிஸ்துவை அனுப்பி சிலுவை மரணத்தின் மூலம் நம்மை இப்படியாக வைத்திருக்கின்றார். நாம் நமது பாவங்களில் ஆன்மீக ரீதியில் மரித்து, வேதனையிலும் இருளிலும் வாழ்ந்தோம், ஆனால் இப்போது சிலுவையில் இயேசு மரித்ததின் மூலம் ஒரு புதிய வாழ்வை அளித்துள்ளார். இந்த மாற்றம் நாம் தேவனின் பிள்ளைகள் என்ற உண்மையை பிரதிபலிக்கிறது. தேவன் நம்மைத் தம்முடைய கைவேலையாகப் படைத்தது மட்டுமின்றி, நம்மை, சேவை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்புகளால் நிரப்பி, நமக்கென்று தனித்துவமான பாதையையும் ஆயத்தம் செய்துள்ளார். எபேசியர் 4:24 -ல், அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
Comments
Post a Comment