"Two sides of God - Love and Justice"
Deal bountifully with Your servant, That I may live and keep Your word. Psalm 119:17.
Here, in this verse, King David asks for God's mercy over his life so that he may live longer and declare God's word. He knew very well that no one can stand before the wrath of God. When King David sinned against God, he cried out to God for mercy, knowing the two sides of God: Love and Justice. In Psalm 51, he admitted his mistakes, obtained God's forgiveness, and reconciled with Him. That's why he says, “Your word I have hidden in my heart, That I might not sin against You.” (Psalm 119:11). Today, in our lives, we make mistakes, but when we admit and turn away from our wicked ways, He forgives us and accepts us just as we are. In Psalm 69:16, David said, “Hear me, O LORD, for Your lovingkindness is good; Turn to me according to the multitude of Your tender mercies.”
உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். சங்கீதம் 119:17.
இங்கே, இந்த வசனத்தில், தாவீது ராஜா தனது வாழ்க்கையில் தேவனின் இரக்கத்த்தினால் நீண்ட காலம் வாழ்ந்து தேவனின் வார்த்தையை அறிவிக்க விரும்புகிறார். தேவனின் கோபத்திற்கு முன்னால் யாராலும் நிற்க முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். தாவீது ராஜா தேவனுக்கு முன்பாகப் பாவம் செய்தபோது, தேவனின் இரு பக்கங்களாகிய அன்பு மற்றும் நீதியை அறிந்து, இரக்கத்த்திற்காக தேவனிடம் முறையிட்டார். சங்கீதம் 51 -ல், அவர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டார், தேவனின் மன்னிப்பைப் பெற்றார், மற்றும் அவருடன் ஒப்புரவாகினார். அதனால்தான், “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.” (சங்கீதம் 119:11) என்று கூறுகிறார். இன்று, நம் வாழ்வில், நாம் தவறு செய்கிறோம், ஆனால் நாம் நம் பொல்லாத வழிகளை ஒப்புக்கொண்டு திரும்பி வரும்போது, அவர் நம்மை மன்னித்து, நாம் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்கிறார். சங்கீதம் 69:16 -ல் தாவீது, “கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்." என்று கூறுகிறார்.
Comments
Post a Comment