"Faith in Jesus brings miracles alive."
If you would believe you would see the glory of God. John11:40.
Here, Jesus is talking to Martha and Mary, the sisters of Lazarus, about having faith in Him. When Lazarus became sick, his sisters sent a message asking Him to come over, having complete faith that Jesus would come and heal him. However, we don’t find Jesus rushing towards Bethany. He already knew what He was going to do; for that to happen, Lazarus must die first. So Jesus came after four days of Lazarus' death to see Mary and Martha with His disciples. The Jews believed that when a person dies, their spirit leaves the body after three days, and then the spirit is unable to reunite with the body. So Jesus took that time to show that if we believe, we could see the glory of God raising Lazarus from the grave. Even today, Jesus performs miracles in our lives if we believe. However, we must be willing to wait for His timing. In Mark 9:23, Jesus said to him, “If you can believe, all things are possible to him who believes.”
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய். யோவான் 11:40.
இங்கே, இயேசு லாசருவின் சகோதரிகளான மார்த்தாள் மற்றும் மரியாளிடம் விசுவாசத்தைப் பற்றி பேசுகிறார். லாசரு நோய்வாய்ப்பட்டபோது, அவரது சகோதரிகள் இயேசு வந்து அவரைக் குணப்படுத்துவார் என்று முழு விசுவாசத்துடன் அவரை வரச் சொல்லி செய்தி அனுப்பினார்கள். இருப்பினும், இயேசு உடனே வரவில்லை. அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு முன்பே தெரியும்; அது நிறைவேற, லாசரு முதலில் மரிக்க வேண்டும். ஆகவே, லாசரு இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, மரியாளையும் மார்த்தாளையும் பார்க்க இயேசு வந்தார். யூதர்கள் ஒரு நபர் இறந்தால், அவரது ஆவி மூன்று நாட்களுக்குப் பிறகு உடலை விட்டு வெளியேறுகிறது, பின்னர் ஆவியை உடலுடன் மீண்டும் ஒன்றிணைக்க முடியாது என்று நம்பினர். ஆகவே, நாம் விசுவாசித்தால், லாசருவைக் கல்லறையிலிருந்து எழுப்பிய தேவனின் மகிமையைக் காண முடியும் என்பதைக் காட்ட இயேசு நாலாம் நாளிலே வந்தார். இன்றும், நாம் விசுவாசித்தால் இயேசு நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்கிறார். இருப்பினும், அவருடைய நேரத்திற்காக காத்திருக்க நாம் தயாராக இருக்க வேண்டும். மாற்கு 9:23 -ல், “இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.”
I used to wonder what is the proper of brining Lazarus back to life and understood it is a foreshadow of the resurrection of Christ. Through faith one can overcome death and join in His eternal Glory. Thank you for sharing this.
ReplyDelete