"God treasures our secret tears."
God knows everything we are going through; He is Omniscient. Every day, we encounter problems one after another that come and hit us. Sharing our problems with people is not going to help us; we should take them to our Father, who cares for us. According to David, God knows our wanderings, and when we cry secretly to Him, He puts every drop of our tears in His bottle and answers our tears. When we secretly place our petitions at the feet of the Lord, He will reward us openly. The very reason He cares about us and our tears shows that He is mindful of us. When God is mindful of us, He is going to take good care of us. In Psalm 115:12, David says, "The Lord has been mindful of us; He will bless us; He will bless the house of Israel; He will bless the house of Aaron."
என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? சங்கீதம் 56:8.
நாம் கடந்து செல்லும் பாதைகளை தேவன் அறிவார்; அவர் எல்லாம் அறிந்தவர். ஒவ்வொரு நாளும், பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நம்மைத் தாக்குகின்றன. நமது பிரச்சனைகளை மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் நமக்கு பிரயோஜனமில்லை; நாம் அவைகளை நம்மைக் விசாரிக்கிற பரம பிதாவிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தாவீதின் கூற்றுப்படி, நாம் தேவனைவிட்டு அலைவதை அறிந்திருக்கிறார், ஆனாலும் நாம் அவரிடம் தனித்து அழுது ஜெபிக்கும்போது, அவர் நம் ஒவ்வொரு துளி கண்ணீரையும் தம் துருத்தியில் வைத்து, நம் கண்ணீருக்குப் பதிலளிக்கிறார். கர்த்தருடைய பாதத்தில் நாம் அந்தரங்கத்தில் இரகசியமாக செய்யும் விண்ணப்பங்களுக்கு, அவர் வெளிப்படையாக நமக்கு பதிலளிப்பார். அவர் நம்மை நினைக்கிறவரானபடியால், நமக்கும், நம் கண்ணீருக்கும் அக்கரை காட்டுகிறார். தேவன், நம்மீது கவனம் செலுத்தும்போது, நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்வார். சங்கீதம் 115:12 -ல், தாவீது கூறுகிறார், “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.”
Comments
Post a Comment