"In God's hand, we find solace."
Your hand shall lead me, and Your right hand shall hold me. Psalm 139:10.
King David is speaking about the omniscient (all-knowing) and omnipresent (being present everywhere) nature of God. He is saying, 'God, you know everything I think and do, and God, you know everywhere I am trying to go. Wherever I go and whatever I do, you always hold me with your right hand.' This scripture gives us comfort, knowing that God is there for us in whatever situation we may find ourselves. By providing such care, not only does God protect us, but He also ensures that we don't stray from His will. He is our maker, provider, and protector, knowing what's best for His children. He is always there for us. Through Prophet Isaiah, God gives this assurance. Isaiah 43:2, “When you pass through the waters, I will be with you; And through the rivers, they shall not overflow you. When you walk through the fire, you shall not be burned, Nor shall the flame scorch you.”
உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். சங்கீதம் 139:10.
தாவீது ராஜா, எல்லாவற்றையும் அறிந்த, மற்றும் எங்கும் நிறைந்த, தேவனின், இயல்பைப் பற்றி பேசுகிறார். அவர் கூறுகிறார், 'தேவனே, நான் நினைப்பது, செய்வது, மேலும் நான் எங்கு செல்ல முயற்சிக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், நீங்கள் எப்போதும் என்னை உங்கள் வலது கையால் பிடித்துக் கொள்கிறீர்கள்.' நம்முடைய எந்தச் சூழ்நிலையிலும் தேவன் நமக்காக இருக்கிறார் என்பதை உணர்த்துவதால், இந்த வேதபகுதி, நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அத்தகைய கவனிப்பை வழங்குவதன் மூலம், தேவன் நம்மைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவருடைய சித்தத்திலிருந்து நாம் விலகிச் செல்லாமல் இருப்பதையும் அவர் உறுதிசெய்கிறார். அவர் நம் சிருஷ்டிகர், நமக்கு கொடுப்பவர் மற்றும் நம் பாதுகாவலர், அவருடைய குழந்தைகளாகிய நமக்கு எது சிறந்தது என்பதையும் அவர் அறிவார். அவர் நமக்கு எப்போதும் இருக்கிறார். ஏசாயா 43:2 -ல், ஏசாயா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் நமக்குக் கொடுத்த உறுதி. “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.”
Comments
Post a Comment