A merry heart does good, like medicine, But a broken spirit dries the bones. Proverbs 17:22.
Today's verse describes the effect of a merry heart and a broken spirit in our daily lives. A merry heart makes a person cheerful always and gives strength and healing to their life, but a broken spirit harms the person's whole life. We start our day in a good way, but by the end of the day, the challenges we face put us down and take away the joy from us. To maintain this joy and peace, we need to hold onto Jesus and His words. If we keep His words in our hearts and follow them, we can experience joy always. In our trials and tribulations, we rejoice in Him and praise Him if we have fellowship with Him. This is good medicine for our whole being. King Solomon says in Proverbs 14:30, "A sound heart is life to the body, But envy is rottenness to the bones."
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். நீதிமொழிகள் 17:22.
இன்றைய வசனம் நம் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியான இதயம் மற்றும் உடைந்த ஆவியின் விளைவை விவரிக்கிறது. ஒரு இதயம் மகிழ்ச்சியாக இருக்குமானால் ஒருவரை எப்போதும் மகிழ்ச்சியாக வைக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கைக்கு பலத்தையும், சுகத்தையும் கொடுக்கும், ஆனால் உடைந்த ஆவியினால் அந்த நபரின் முழு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. நாம் நம் நாளை நல்ல முறையில் தொடங்குகிறோம், ஆனால் அந்த நாளின் முடிவில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மை வீழ்த்தி, நம்மிடமிருந்து சந்தோஷத்தைப் பறிக்கின்றன. இந்த மகிழ்ச்சியையும் சமாதானதையும் காக்க, நாம் இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் பற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தைகளை நம் இதயத்தில் வைத்து, அவற்றைப் பின்பற்றினால், நாம் எப்போதும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். நம்முடைய சோதனைகள் மற்றும் உபத்திரவங்களில், நாம் அவருடன் ஐக்கியமாக இருந்தால், அவரில் மகிழ்ச்சி அடைகிறோம், அப்போது அவரைத் துதிக்கிறோம். இது நம் முழு உயிருக்கும் நல்ல மருந்து. நீதிமொழிகள் 14:30 -ல் சாலொமோன் ராஜா, “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” என்று கூறுகிறார்.
Comments
Post a Comment