"Continue in brotherly love; show hospitality."
Let brotherly love continue. Do not forget to entertain strangers. Hebrews 13:1,2.
Today, many of us live selfishly within our comfort zones, prioritizing ourselves and our families before considering others. The Bible tells the story of Abraham and Sarah’s generous hospitality toward the three visitors who came to them. Abraham made a great effort to be hospitable to these men, whose angelic nature was not evident to him, at least initially. By welcoming outsiders, serving them humbly, making them feel safe, and actively engaging with them, we practice hospitality in a way that reflects the love of Christ. When we embrace inclusivity and equality, they are willing to listen to us, as our faith in Christ is at work. Romans 12:10 says, "Be kindly affectionate to one another with brotherly love, in honor giving preference to one another."
சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். எபிரெயர் 13:1,2.
இன்று, நம்மில் பலர் நம்முடைய வாழ்க்கையை வசதியாக அமைத்து அதில் வாழ்கிறோம், மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பு நமக்கும் நம் குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம். ஆபிரகாமும் சாராளும் தங்களிடம் வந்த மூன்று விருந்தாளிகளை தாராளமாக உபசரித்த கதையை பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. ஆபிரகாம் இந்த மனிதர்களை உபசரிக்க பெரும் முயற்சி எடுத்தார், அவர்களின் தேவதூத இயல்பு அவருக்கு ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை. வெளியாட்களை வரவேற்பதன் மூலமும், தாழ்மையுடன் அவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்கள் பாதுகாப்பாக உணர வைப்பதன் மூலமும், அவர்களுடன் தீவிரமாக ஈடுபடுவதன் மூலமும், கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்கும் வகையில் விருந்தோம்பலைக் கடைப்பிடிக்கிறோம். நாம் அவர்களை நம்மைப்போலவும் சமத்துவமாகவும் உபசரிக்கும்போது, கிறிஸ்துவில் நமது விசுவாசம் செயல்பட்டு, அவர்கள் நமக்குச் செவிசாய்க்கிறார்கள். ரோமர் 12:10 சொல்லுகிறது: "சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்."
Comments
Post a Comment