In whom we have redemption [d]through His blood, the forgiveness of sins. Colossians 1:14.
This verse declares that in Jesus Christ, we receive everything: forgiveness, redemption, salvation, healing, and deliverance through His blood shed on the cross. Sin induces fearful consequences: it separates us from God, subjects us to His judgment, and enslaves us to the Devil. We have been purchased at a price—the precious blood of our Savior, Jesus Christ our Lord. He has not only redeemed us from a lost eternity but has also forgiven us of our sins—past, present, and future. When we believe in Him and seek forgiveness for our sins, His blood cancels all our sinful debts. Ephesians 1:7 says, "In Him we have redemption through His blood, the forgiveness of sins, according to the riches of His grace."
[குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர்1:14.
இயேசு கிறிஸ்துவில், மன்னிப்பு, மீட்பு, இரட்சிப்பு, குணமாகுதல் மற்றும் சிலுவையில் சிந்தப்பட்ட அவரது இரத்தத்தின் மூலம் விடுதலை ஆகிய அனைத்தையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்று இந்த வசனம் தெரிவிக்கிறது. பாவம் பயங்கரமான விளைவுகளைத் தூண்டுகிறது: அது நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது, அவருடைய நியாயத்தீர்ப்புக்கு நம்மை உட்படுத்துகிறது, மேலும் பிசாசுக்கு நம்மை அடிமைப்படுத்துகிறது. நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் —கிரயத்துக்குக் கொள்ளப் பட்டிருக்கிறோம். நாம் இழந்த நித்தியவாழ்விலிருந்து அவர் நம்மை மீட்டது மட்டுமல்லாமல், நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால பாவங்களை மன்னித்தார். நாம் அவரை விசுவாசித்து நமது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கும்போது, அவருடைய இரத்தம் நம்முடைய பாவமனைத்தையும் ரத்து செய்கிறது. எபேசியர் 1:7 சொல்லுகிறது, "அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது."
Comments
Post a Comment