"Trusting God in life's battles."
Then all this assembly shall know that the Lord does not save with sword and spear; for the battle is the Lord’s, and He will give you into our hands.” 1 Samuel 17:47.
Today's verse is from the story of David and Goliath. David, a humble shepherd, steps forward to fight the giant warrior Goliath. He had a secret weapon: trusting in God for all his victories. He knew that he alone could not beat Goliath, but he also knew that God could and would deliver him from Goliath and the entire Philistine army. If we trust in the power of God like David, we can overcome our day-to-day challenges. David emphasizes that the battle belongs to the Lord and cannot be fought with physical strength or weapons. There are many things in life that we don’t have control over, but they are under God’s control. Therefore, we don’t need to fight. Instead, we can have an attitude of quiet confidence in God. And as we do, our faith will deepen as we learn to expect His provision even when facing our biggest problems. 2 Chronicles 20:15 says, "Thus says the Lord to you: ‘Do not be afraid nor dismayed because of this great multitude, for the battle is not yours, but God’s."
இன்றைய வசனம் தாவீது மற்றும் கோலியாத்தின் கதையிலிருந்து எடுக்கப்பட்டது. ஒரு சாதாரண மேய்ப்பரான தாவீது, ராட்சத போர்வீரனாகிய கோலியாத்துடன் சண்டையிட முன்வருகிறார். அவரிடம் ஒரு ரகசிய ஆயுதம் இருந்தது: அவருடைய எல்லா வெற்றிகளுக்கும் தேவனை நம்புவது. தன்னால் மட்டுமே கோலியாத்தை வெல்ல முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால் கோலியாத்திலிருந்தும் முழு பெலிஸ்திய இராணுவத்திலிருந்தும் தேவன் தன்னை விடுவிக்க முடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். தாவீதைப் போல தேவனுடைய வல்லமையில் நாம் நம்பிக்கை வைத்தால், நம்முடைய அன்றாட சவால்களை நாம் சமாளிக்க முடியும். யுத்தம் கர்த்தருடையது என்றும், உடல் வலிமையோடோ அல்லது ஆயுதங்களாலோ போராடி வெற்றிபெற முடியாது என்றும் தாவீது குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவை தேவனின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, நாம் போராட வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, தேவனிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைக்கும் மனப்பான்மையை நாம் கொண்டிருக்கவேண்டும். நாம் அவ்வாறு செய்யும்போது, நம்முடைய மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது கூட அவருடைய சிறப்பான வழிகளை எதிர்பார்க்க கற்றுக்கொள்ளும்போது நமது விசுவாசம் ஆழமாகும். 2 நாளாகமம் 20:15 கூறுகிறது: நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
Comments
Post a Comment