"God protects us from visible and invisible enemies."
The LORD shall preserve your going out and your coming in From this time forth, and even forevermore. Psalm 121:8.
The Lord will guard our going out and our coming in. 'Going out' refers to a person leaving home in the morning for labor, and 'coming in' refers to their return home after work. He will guard and protect every area of our lives. Today's promise is that the Lord watches over His people every day. When we come before the Lord in prayer and lift all things up to Him, simply trusting Him at His word, we invite Him into those areas of our lives. We enable His mighty hand to move in unseen ways to protect us from threats that we cannot see. We have an invisible enemy who desires to destroy us, but when we trust in the Lord and His promises, He will protect us from all evil. As the attack is ongoing, the protection of God is also ongoing. Thus, God wants us to live without fear of evil and evildoers. Hebrews 13:6 says, "So we may boldly say: “The Lord is my helper; I will not fear. What can man do to me?”கர்த்தர் உன் போக்கையும் உன்வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121:8
நாம் புறப்பட்டு வெளியே செல்லும்போதும், திரும்பி உள்ளே வரும்போதும் கர்த்தர் பாதுகாக்கிறார். 'வெளியே செல்வது' என்பது வேலைக்காக காலையில் வீட்டை விட்டு வெளியே போவதையும், 'உள்ளே வருவது' என்பது வேலை முடிந்து வீடு திரும்புவதையும் குறிக்கிறது. அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாக்கும் ஒரு காவலராக இருக்கிறார். கர்த்தர் ஒவ்வொரு நாளும் தம்முடைய ஜனங்களைக் கண்காணிக்கிறார் என்பதே இன்றைய வாக்குத்தத்தம். நாம் ஜெபத்தில் கர்த்தருக்கு முன்பாக வந்து, எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி, அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பும்போது, நம் வாழ்க்கையின் தேவையான காரியங்களுக்கு அவரை அழைக்கிறோம். நம்மால் பார்க்க முடியாத அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க, கண்ணுக்குத் தெரியாத வழிகளில் அவரது வலிமைமிக்க கை இயங்கும். நம்மை அழிக்க விரும்பும் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரி நமக்கு இருக்கிறான், ஆனால் நாம் கர்த்தரையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் நம்பும்போது, அவர் எல்லா தீமைகளிலிருந்தும் நம்மை பாதுகாப்பார். ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடந்து வருவதால், தேவனின் பாதுகாப்பும் தொடர்ந்து வருகிறது. எனவே, தீமைகளுக்கும் தீயவர்களுக்கும் பயப்படாமல் நாம் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். எபிரெயர் 13:6 சொல்லுகிறது, "அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே."
Comments
Post a Comment