"God Sees Everything Always"
The eyes of the Lord are in every place, Keeping watch on the evil and the good. Proverbs 15:3.
No one in heaven or on earth can hide from God's watchful eyes. He is always watching over His creation, seeing and knowing everything about everyone, both good and bad. In Genesis 16, an Egyptian servant named Hagar goes through hard times and learns that God is the God who sees. When she was in distress, hiding and traveling in the wilderness, Hagar called Him "El Roi," which means “the God Who Sees me.” He knows our situation, and He is in control and trustworthy. In Psalm 139, King David says he cannot hide his thoughts, dreams, or even unspoken words from God. God fully knows even the thoughts and intents of our hearts. There is nothing in our lives that we can hide from Him. Even if we have secret sins that others do not know about, He knows each one fully. But when we confess our sins, He is ready to save us. Proverbs 5:21 says, “For the ways of man are before the eyes of the LORD, And He ponders all his paths.”
வானத்திலோ, பூமியிலோ உள்ள எவரும் தேவனின் கண்காணிப்பிலிருந்து மறைந்திருக்க முடியாது. அவர் எப்போதும் தனது படைப்பைக் கண்காணித்து, அனைவரைப் பற்றியும் நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்து அறிந்திருக்கிறார். ஆதியாகமம் 16 ல், ஆகார் என்ற எகிப்திய வேலைக்காரி கடினமான பாதையில் சென்று தேவன் “காண்கிற தேவன்” என்பதை அறிந்து கொள்கிறாள். அவள் துன்பத்துடன் தனிமையாக, வனாந்தரத்தில் பயணம் செய்தபோது, ஆகார் அவரை “எல் ரோயி” என்று அழைத்தாள், அதற்கு "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று அர்த்தம். அவர் நமது சூழ்நிலையை அறிந்திருக்கிறார், அவர் நம்மை நம்பிக்கையாக நடத்துகிறவராகவும் இருக்கிறார். சங்கீதம் 139ல், தாவீது ராஜா தனது நினைவுகளை, சொப்பனங்களை, அல்லது சொல்லப்படாத வார்த்தைகளைக் கூட தேவனிடமிருந்து மறைக்க முடியாது என்று கூறுகிறார். தேவன் நம்முடைய இருதயங்களின் எண்ணங்களையும் நோக்கங்களையும் கூட முழுமையாக அறிந்திருக்கிறார். நம் வாழ்வில் தேவனிடமிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது. மற்றவர்கள் அறியாத இரகசிய பாவங்கள் நம்மிடம் இருந்தாலும், அவர் ஒவ்வொன்றையும் முழுமையாக அறிந்திருக்கிறார். ஆனால் நம் பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, நம்மை இரட்சிக்க அவர் ஆயத்தமாக இருக்கிறார். நீதிமொழிகள் 5:21 கூறுகிறது, “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்”.
Comments
Post a Comment