"Delight in God's Word Always"

I will delight myself in Your statutes; I will not forget Your word. Psalm 119:16.

In this verse, the Psalmist expresses his delight in God’s word. The word "delight" means “to gain great pleasure, satisfaction, and happiness.” He enjoyed meditating on God's word because it brought him great pleasure, peace, joy, and satisfaction. When we carefully treasure God's word within us, God fills our hearts with wisdom and knowledge, and we are not easily deceived by wicked people. King David says in Psalm 1 that if we delight in the law of the Lord, we will be like a tree planted by streams of water, which yields its fruit in season and whose leaf does not wither. Whatever we do shall prosper. It is our choice to live our lives in His word. When we do not delight in God’s word, we are inclined to forget it. Another blessing of delighting in His word is knowing His will and our future plans. Psalm 37:4 says, "Delight yourself also in the Lord, And He shall give you the desires of your heart."

உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். சங்கீதம் 119:16

இந்த வசனத்தில், சங்கீதக்காரன் தேவனுடைய வார்த்தையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். "மகிழ்ச்சி" என்ற வார்த்தைக்கு "மிகுந்த சந்தோஷம், திருப்தி மற்றும் இன்பத்தைப் பெறுவது" என்று அர்த்தம். தேவனுடைய வார்த்தையை ஆழமாக யோசித்துப்பார்ப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தையும் சமாதானத்தையும் திருப்தியையும் தந்தது. தேவனுடைய வார்த்தையை நமக்குள் நாம் கவனமாக பொக்கிஷமாக வைத்திருக்கும்போது, தேவன் நம் இதயங்களை ஞானத்தாலும் அறிவாலும் நிரப்புகிறார், பொல்லாதவர்களால் நாம் எளிதில் ஏமாற்றப்படுவதில்லை. தாவீது ராஜா சங்கீதம் 1-ல் கூறுகிறார், நாம் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்தால், நீரோடைகளின் ஓரத்தில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவோம், அது காலப்போக்கில் தன் கனியைத் தருகிறது, இலை வாடாதிருக்கிறது. நாம் எது செய்தாலும் அது வாய்க்கும். அவருடைய வார்த்தையில் நம் வாழ்க்கையை வாழ்வது நமது அனுக்கிரகம். கடவுளுடைய வார்த்தையில் நாம் மகிழ்ச்சியடையாதபோது, அதை மறந்துவிட முயறச்சி  செய்கிறோம். அவருடைய வார்த்தையில் மகிழ்ச்சியடைவதில் உள்ள மற்றொரு ஆசீர்வாதம், அவருடைய சித்தத்தையும் நமது எதிர்காலத் திட்டங்களையும் அறிவதாகும். சங்கீதம் 37:4 சொல்லுகிறது, "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்."

 

Comments

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"