"Blog Y2 450 - Fear God, Find Life"

 

The fear of the Lord is a fountain of life, To turn one away from the snares of death. Proverbs 14:27.

This verse highlights the importance of fearing the Lord, showing that reverence for God brings life, protection, and wisdom. It reminds us that honoring God leads to a purposeful, fulfilling life, keeping us safe from spiritual destruction. The "fear of the Lord" is like a life-giving fountain, providing spiritual nourishment, joy, and purpose. It helps believers grow in their relationship with God, bringing wisdom and understanding. As Proverbs 1:7 says, it is the beginning of true knowledge. The fear of the Lord also protects us from the dangers of sin and death. It keeps us from falling into traps that lead us away from God, guiding us away from temptation and harmful choices. Psalm 19:9 says: "The fear of the Lord is clean, enduring forever; The judgments of the Lord are true and righteous altogether."

Reflection: Am I living with a genuine fear of the Lord that brings wisdom, guidance, and protection from sin?

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். நீதிமொழிகள் 14:27.

இந்த வசனம் கர்த்தருக்குப் பயப்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, தேவனுக்கு முன்பாக பயபக்தியாயிருப்பது  ஜீவனையும், பாதுகாப்பையும், ஞானத்தையும் தருகிறது என்பதைக் வெளிப்படுத்துகிறது.  தேவனை கனம்பண்ணுவது ஒரு நோக்கமுள்ள, நிறைவான வாழ்க்கைக்கு வழிநடத்தி, ஆன்மீக அழிவிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. "கர்த்தருக்குப் பயப்படுதல்" என்பது ஜீவனளிக்கும் நீரூற்று போன்றது, இது ஆவிக்குரிய ஊட்டச்சத்தையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் தெரிவிக்கிறது. இது விசுவாசிகளுக்கு தேவனுடனான உறவில் வளர உதவியுடன், ஞானத்தையும் புரிதலையும் கொண்டுவருகிறது. நீதிமொழிகள் 1:7 சொல்வது போல், இது உண்மையான அறிவின் ஆரம்பம். கர்த்தருக்குப் பயப்படுதல் பாவம் மற்றும் மரணத்தின் ஆபத்துகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. தேவனிடமிருந்து நம்மை விலக்கிச் செல்லும் கண்ணிகளில் விழாதபடி அது நம்மைத் தடுத்து, சோதனையிலிருந்தும் தீமையான முடிவுகளிலிருந்து நம்மை விலக்கிக் காக்கிறது. சங்கீதம் 19:9 சொல்லுகிறது: "கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது."

சிந்திக்க: ஞானத்தையும், வழிகாட்டுதலையும், பாவத்திலிருந்து பாதுகாப்பையும் கொண்டுவரும் கர்த்தரைப் பற்றிய உண்மையான பயத்துடன் நான் வாழ்கிறேனா?




Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"