"Embrace Wisdom, Find the Way"
Take firm hold of instruction, do not let go; Keep her, for she is your life. Proverbs 4:13.
This proverb teaches us how we should live by listening to instructions. King Solomon says that we need to keep our father’s command and not forsake the law of our mother. We should bind them continually upon our hearts and tie them around our necks. When we roam, they will lead us; when we sleep, they will keep us; and when we awake, they will speak with us. When we listen to and hold onto these instructions, they provide a way of life. We need to fear God and listen to His word to receive life and eternal blessing. His commandments light our way and lead us in the way of life. Whoever is willing to be disciplined by these instructions will find the way of life. Proverbs 6:23 says, “For the commandment is a lamp, And the law a light; Reproofs of instruction are the way of life.”
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன். நீதிமொழிகள் 4:13.
அறிவுரைகளைக் கேட்டு நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த நீதிமொழி நமக்குக் கற்பிக்கிறது. சாலொமோன் ராஜா கூறுகிறார், நாம் நம் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும், நம் தாயின் சட்டத்தை விட்டுவிடக்கூடாது. அவற்றை நாம் எப்பொழுதும் நம்முடைய இருதயங்களில் அணிந்து, அவற்றை நம்முடைய கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். நாம் போகுமிடமெல்லாம், அவைகள் நம்மை வழிநடத்தும்; நாம் உறங்கும்போது, அவை நம்மைக் காக்கும்; நாம் விழித்தெழும்போது, அவைகள் நம்முடன் பேசும். இந்த அறிவுரைகளை நாம் கேட்டு பற்றிக்கொள்ளும்போது, அவை ஒரு வாழ்க்கை முறையை கொடுக்கின்றது. ஜீவனையும் நித்திய ஆசீர்வாதத்தையும் பெற நாம் தேவனுக்குப் பயந்து, அவருடைய வார்த்தையைக் கேட்க வேண்டும். அவருடைய கட்டளைகள் நம் வழிக்கு வெளிச்சம் கொடுத்து, ஜீவ வழியில் நம்மை நடத்துகின்றன. இந்த அறிவுரைகளால் நடத்தப்பட விரும்புகிறவன் வாழ்வின் வழியைக் கண்டுபிடிப்பான். நீதிமொழிகள் 6:23 கூறுகிறது, “கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.”
Comments
Post a Comment