"Experiencing God's Love Daily"
Because he has set his love upon Me, therefore I will deliver him; I will set him on high, because he has known My name. Psalm 91:14.
Here, King David mentions the intimate relationship he has with God as he experiences God's love every day. During difficult times, in the valley of the shadow of death, God delivered him. In all circumstances, he experienced God's love by walking closely with Him. Throughout the Psalms, David describes the nature, attributes, and power of God. He portrays God as his protector, refuge, fortress, stronghold, strength, and shield. The secret to knowing God's protection and seeing it manifest in our lives is to know God intimately. To know God intimately means to understand and experience Him in our lives and to develop a deep and personal relationship with Him. If we trust Him and walk closely with Him, He will take us to higher places and bless us. Psalm 22:8 says, “He trusted in the LORD, let Him rescue him; Let Him deliver him since He delights in him!”
இங்கே, தாவீது ராஜா ஒவ்வொரு நாளும் தேவனின் அன்பை அனுபவிக்கும்போது, தேவனுடன் தனக்குள்ள நெருக்கமான உறவைக் குறிப்பிடுகிறார். கடினமான காலங்களில், மரண இருளின் பள்ளத்தாக்கில், தேவன் அவரை விடுவித்தார். எல்லா சூழ்நிலைகளிலும், அவர் தேவனோடு நடந்து சென்றதன் மூலம் அவருடைய அன்பை அனுபவித்தார். சங்கீதம் முழுவதும், தாவீது தேவனின் இயல்பு, பண்புகள் மற்றும் வல்லமையை விவரிக்கிறார். அவர் தேவனை தனது பாதுகாவலராகவும், அடைக்கலமாகவும், கோட்டையாகவும், அரணாகவும், வலிமையாகவும், கேடயமாகவும் சித்தரிக்கிறார். தேவனுடைய பாதுகாப்பை அறிந்துகொள்வதற்கும், அது நம் வாழ்வில் வெளிப்படுவதைக் காண்பதற்கும் உள்ள இரகசியம், தேவனை நெருக்கமாக அறிவதாகும். தேவனை நெருக்கமாக அறிந்துகொள்வது என்பது நம் வாழ்வில் அவரைப் புரிந்துகொள்வதும் அனுபவிப்பதும் அவருடன் ஆழமான மற்றும் தனிப்பட்ட உறவை வளர்ப்பதும் ஆகும். நாம் அவரை நம்பி அவரோடு நெருக்கமாக நடந்தால், அவர் நம்மை உயர்த்தி ஆசீர்வதிப்பார். சங்கீதம் 22:8 சொல்லுகிறது, “கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்”.
Amen!
ReplyDelete