Blog # 314 - "Seek wise counsel to win battles"
For by wise counsel you will wage your own war, And in a multitude of counselors there is safety. Proverbs 24:6.
This verse highlights the importance of seeking wise counsel and advice from others, particularly when facing difficult or challenging situations. We face two kinds of war daily in our lives: spiritual and physical warfare. Both types of warfare require wisdom and the counsel of God and advisors to achieve victory. One of the names of God is Counselor. We need to connect with God more to win spiritual warfare by meditating on His word daily. To overcome physical challenges, we need to surround ourselves with wise people and numerous counselors to make wise decisions and receive guidance. When we trust Him and follow His words wisely, we always win our battles. We know how Moses and Joshua sincerely followed God's counsel to lead the people of Israel. Have you heard the counsel of God? Do you limit wisdom to yourself? Psalm 73:24 says, "You will guide me with Your counsel, and afterward receive me to glory."
நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும். நீதிமொழிகள் 24:6.
இந்த வசனம் கடினமான அல்லது சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது நாம் மற்றவர்களிடமிருந்து ஞானமான ஆலோசனையையும் அறிவுரையையும் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக நம் வாழ்வில் தினமும் ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான, இரண்டு வகையான போராட்டங்களை எதிர்கொள்கிறோம். இரண்டு வகையான போராட்டங்களிலும் வெற்றியை அடைய ஞானம், தேவனின் ஆலோசனை மற்றும் ஆலோசகர்கள் தேவை. தேவனின் பெயர்களில் ஒன்று ஆலோசனை கர்த்தர். ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலம் ஆவிக்குரிய போரை வெல்ல நாம் தேவனுடன் அதிகம் இணைந்திருக்க வேண்டும். சரீரப்பிரகாரமான சவால்களைச் சமாளிக்க, ஞானமான தீர்மானங்களை எடுக்கவும் வழிகாட்டுதலைப் பெறவும் நம்மைச் சுற்றி ஞானமுள்ளவர்களையும், ஆலோசகர்களையும் வைத்திருக்க வேண்டும். நாம் தேவனை நம்பி அவருடைய வார்த்தைகளை ஞானமாக பின்பற்றும்போது, நாம் எப்போதும் நமது போராட்டங்களில் வெற்றி பெறுகிறோம். இஸ்ரவேல் மக்களை வழிநடத்த மோசேயும் யோசுவாவும் தேவனுடைய ஆலோசனையை எவ்வாறு மனப்பூர்வமாகப் பின்பற்றினார்கள் என்பதை நாம் அறிவோம். தேவனுடைய ஆலோசனையைக் கேட்டிருக்கிறீர்களா? ஞானஅறிவுரைகள் செல்லாதபடி, உங்களுள்க்குள்ளேயே வைத்துக் கொள்கிறீர்களா? சங்கீதம் 73:24 கூறுகிறது, "உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.”
Comments
Post a Comment