Blog # 323 - ""Hunger and thirst for God's word"

Blessed are You, O Lord! Teach me Your statutes. Psalm 119:12.

Psalm 119 is a lengthy meditation addressed to God on the excellencies of His law. The law here refers not to legal requirements such as the law of Moses but to the whole of God’s instruction for humankind in general. Therefore, God’s law is also called His word, commandments, sayings, judgments, statutes, ordinances, instructions, precepts, testimonies, promises, ways, and paths. At least one of these words occurs in almost every verse of the psalm. In this verse, the psalmist praises and blesses the name of the Lord. He asks God to teach him the word of God, as his knowledge is lacking, and he needs wisdom from God. In the same way, we can also ask God to teach us His word. Do we have the hunger and thirst for the word of God? Psalm 25:5 says, "Lead me in Your truth and teach me, For You are the God of my salvation; On You I wait all the day."

கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். சங்கீதம் 119:12.

சங்கீதம் 119 என்பது தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் சிறப்புகளைப் பற்றி தேவனுக்கு எழுதிய ஒரு நீண்ட தியானமாகும். இங்கு 'நியாயப்பிரமாணம்' என்பது மோசேயின் சட்டம் போன்ற சட்டத் தேவைகளைக் குறிப்பதல்ல; மாறாக, மனிதகுலத்திற்கான தேவனுடைய முழுமையான போதனையைச் சொல்கிறது. ஆகையால், தேவனுடைய நியாயப்பிரமாணத்தை அவர் சொல்லிய வார்த்தை, கட்டளைகள், நீதிகள், நியமங்கள், சட்டங்கள், உத்தரவுகள், போதனைகள், கற்பனைகள், சாட்சிகள், வாக்குறுதிகள், வழிகள், பாதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைகளில் குறைந்தது ஒன்று, ஒவ்வொரு சங்கீதத்தின்  வசனத்திலும் வருகிறது. இந்த வசனத்தில் சங்கீதக்காரன் கர்த்தருடைய நாமத்தைத் துதித்து ஸ்தோத்திரிக்கிறார். அவன் தன்னுடைய அறிவு குறைவு என்பதாலும், மற்றும் அவனுக்கு தேவ ஞானம் தேவைப்படுவதாலும், தேவனுடைய வார்த்தையை தனக்கு கற்பிக்கும்படி தேவனிடம் கேட்கிறான். அவ்வாறே நாமும், தேவனுடைய வார்த்தையை நமக்குக் கற்பிக்கும்படி வேண்டிக்கொள்ளலாம். தேவனுடைய வார்த்தையின் மீது நமக்கு பசி, தாகம் இருக்கிறதா? சங்கீதம் 25:5 சொல்லுகிறது, “உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.”


 


Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

"Blog Y2 042 - Good News Refreshes the Weary Soul"

Blog # 327 - "Confidently Wait for the Lord's Timing"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"Blog Y2 014 - God Answers Our Prayers Before We Ask"

"God will give us victory"

Blog # 340 - "Living God's Love Through Actions"