I waited patiently for the Lord; and He inclined to me and heard my cry. Psalm 40:1.
In this verse, King David waited upon the Lord without an immediate answer. He waited diligently and earnestly, patiently and perseveringly, until God was pleased to help him. God inclined to him and heard his cry. The word "inclined" conveys the sense of God bending down to David in his affliction, removing any perceived distance between the Lord and His servant. When David knew God heard his cry, he was confident of a favorable answer. In the same way, God inclines to us and hears our cry when we wait patiently for Him. We need to wait for His timing to see miracles happening in our lives. He acts in His own way and at His preferred time to develop our faith in His Word and to enlarge our trust in His unfailing goodness and grace. Are you waiting patiently for the Lord’s timing in your life? Psalm 27:14 says, “Wait on the LORD; Be of good courage, And He shall strengthen your heart; Wait, I say, on the LORD!.”
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம் 40:1.
இந்த வசனத்தில், தாவீது ராஜா உடனடியாக பதில் இல்லாமல் கர்த்தருக்காக காத்திருந்தார். அவன் தேவனின் உதவியைப் பெறும்வரை சிரத்தையோடும் மனோதைரியத்தோடும் பொறுமையோடும் இருந்தான். தேவன் அவன்மேல் சாய்ந்து, அவன் கூப்பிடுதலைக் கேட்டார். "சாய்ந்து" என்ற வார்த்தை தேவன் தாவீதின் துன்பத்தில் குனிந்து, கர்த்தருக்கும் அவருடைய ஊழியனுக்கும் இடையிலான இடைவெளியை அகற்றியதாகவும் குறிப்பிடுகிறது. தேவன் தன் கூக்குரலைக் கேட்டதை தாவீது அறிந்தபோது, சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதுபோலவே, நாம் அவருக்காக பொறுமையுடன் காத்திருக்கும்போது, தேவன் நம்மை நோக்கி சாய்ந்து, நமது கூப்பிடுதலைக் கேட்கிறார். நம் வாழ்வில் அற்புதங்கள் நடப்பதைக் காண அவரது நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். அவருடைய வார்த்தையில் நமது விசுவாசத்தை வளர்க்கவும், அவருடைய தவறாத நன்மை மற்றும் கிருபையின் மீதான நமது நம்பிக்கையை விரிவுபடுத்தவும் அவர் தன் முறைப்படி, தன் நேரத்தில் செய்கிறார். உங்கள் வாழ்க்கையில் கார்த்தருடைய நேரத்திற்காக நீங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறீர்களா? சங்கீதம் 27:14 சொல்லுகிறது, “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.”
Comments
Post a Comment