Blog # 328 - "Rely on Jesus for protection"
Every word of God is pure; He is a shield to those who put their trust in Him. Proverbs 30:5.
This verse speaks about the perfection and power of God's word. The Apostle John says, "The Word became flesh and made His dwelling among us." Jesus is the Word of God, perfect, blameless, and pure. He came into this world to save us and deliver us from a sinful life. He protects us when we trust in Him. He is the way, the truth, and the life. When we accept Him as our Savior, He transforms us and makes us perfect. If we read His word daily, listen to His voice, and obey Him, He will be our shield, fortress, strong tower, refuge, and shelter. He will protect us and keep us safe under His mighty arms. Today's verse affirms that God protects those who rely on Him. Do you trust in Jesus as your Savior and rely on Him for protection and guidance in your daily life? Psalm 18:30 says, "As for God, His way is perfect; The word of the Lord is proven; He is a shield to all who trust in Him."
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். நீதிமொழிகள் 30:5.
இந்த வசனம் தேவனுடைய வார்த்தையின் பரிபூரணத்தையும் வல்லமையையும் பற்றி பேசுகிறது. அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லுகிறார், "அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்." இயேசு தேவனுடைய வார்த்தை, பரிபூரணமானவர், குற்றமற்றவர், தூய்மையானவர். நம்மை இரட்சிக்கவும், பாவ வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்கவும் அவர் இந்த உலகத்திற்கு வந்தார். நாம் அவரை நம்பும்போது அவர் நம்மைப் பாதுகாக்கிறார். அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார். நாம் அவரை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நம்மை மாற்றி நம்மை பரிபூரணமாக்குகிறார். நாம் அனுதினமும் அவருடைய வார்த்தையை வாசித்து, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவரே நமக்குக் கேடகமாகவும், கோட்டையாகவும், பலத்த கோபுரமாகவும், அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் இருப்பார். அவர் நம்மைப் பாதுகாத்து, அவருடைய வல்லமையான கரங்களின் கீழ் நம்மை சுகமாக வைப்பார். தம்மை நம்பியவர்களை தேவன் பாதுகாக்கிறார் என்பதை இன்றைய வசனம் உறுதிப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் இரட்சகராக இயேசுவை நம்பி, உங்கள் தினசரி வாழ்வில் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலுக்காக அவரைச் சார்ந்திருக்கிறீர்களா? சங்கீதம் 18:30 கூறுகிறது, “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.”
Comments
Post a Comment