"God Restores with Joyful Salvation"
Restore to me the joy of Your salvation, And uphold me by Your generous Spirit. Psalm 51:12.
God's purpose is to restore man's right standing with Him by forgiving wickedness and remembering sins no more. Psalm 51 records King David’s entire prayer, including his plea for the joy of salvation after his adultery and murder, which led him to depression and loss of joy. He prays in repentance for mistakes that separated him from God and desires to regain the joy he once felt in a close relationship with God. God gave him the joy of His salvation and sustained him with a willing spirit. Are you waiting for restoration in your life? If you repent and ask God, He is ready to forgive, heal, and restore you with the joy of His salvation. Let us say as Psalm 80:7 says, "Restore us, O God of hosts; cause Your face to shine, and we shall be saved!"
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். சங்கீதம் 51:12.
தீயவற்றை மன்னித்து, பாவங்களை இனி நினைவில் கொள்ளாமல், மனிதனை தம்மோடு ஒன்றாகச் சேர்ப்பதே தேவனின் நோக்கமாக இருக்கிறது. தாவீது ராஜா தனது விபச்சாரம் மற்றும் கொலையினால் ஏற்பட்ட மனவருத்தம் மற்றும் மகிழ்ச்சி இழப்பால் மன்னிப்பு கேட்டார். அவர் செய்த முழு ஜெபத்தையும் சங்கீதம் 51 பதிவு செய்கிறது. தன்னை தேவனிடம் இருந்து பிரித்த தவறுகளுக்காக மறுபடியும் மனம்மாறி ஜெபிக்கிறார், அதோடு தேவனுடன் இருந்த நெருக்கமான உறவிலிருந்த மகிழ்ச்சியை மீண்டும் பெற விரும்புகிறார். தேவன் தம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை தாவீதுக்குக் கொடுத்து, மனமகிழ்ச்சியின் ஆவியோடு அவனைத் தாங்கினார். உங்கள் வாழ்க்கையில் புது வாழ்வுக்க்காகக் காத்திருக்கிறீர்களா? நீங்கள் மனந்திரும்பி தேவனிடம் கேட்டால், அவர் மன்னிக்கவும், குணமாக்கவும், அவருடைய இரட்சிப்பின் மகிழ்ச்சியால் உங்களை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார். சங்கீதம் 80:7 சொல்லுகிறபடி நாமும் சொல்லுவோம், “சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.”
Comments
Post a Comment