"Love others as Jesus loves us"

For this is the message that you heard from the beginning, that we should love one another. 1 John 3:11.

God created mankind in His own image to share His love and have a relationship with them. But they disobeyed Him and broke the relationship with Him. Then God felt bad and decided to save them by sending His only Son Jesus to die for their sins and save them. Today, God expects us to show the sacrificial love of Jesus on the cross to others. 1 Corinthians 13 speaks about His love, which is kind, patient, does not envy or boast, and is not arrogant or rude. It does not insist on its own way; it is not irritable or resentful; it does not rejoice at wrongdoing, but rejoices with the truth. If we have the love of Jesus in our hearts, then we can love others, even those who hate us. We are to imitate the love of Jesus, while serving and loving others just as He did! John 13:34 says, "A new commandment I give to you, that you love one another: just as I have loved you, you also are to love one another."

நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. I யோவான் 3:11.

தேவன் தம்முடைய அன்பைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடன் உறவு கொள்ளவும் தம்முடைய சொந்த சாயலில் மனிதகுலத்தை உருவாக்கினார். ஆனால் அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமல் அவருடனான உறவை முறித்துக் கொண்டனர். பின்னர் தேவன் மனம் நொந்து, தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை அனுப்பி அவர்களுடைய பாவங்களுக்காக அவரை மரணத்திற்கு ஒப்புவித்து  அவர்களை இரட்சிக்க தீர்மானித்தார். இப்பொழுதும், இயேசுவின் சிலுவையின்  தியாக அன்பை நாம் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 1 கொரிந்தியர் 13 அவருடைய அன்பைப் பற்றி பேசுகிறது, “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.” நம் இருதயங்களில் இயேசுவின் அன்பு இருந்தால், நாம் மற்றவர்களை நேசிக்க முடியும், நம்மை வெறுப்பவர்களிடம்கூட அன்புகூர முடியும், நாம் இயேசுவின் அன்பைப் பின்பற்ற வேண்டும், அதே சமயம் அவர் செய்ததைப் போலவே மற்றவர்களுக்கு சேவை செய்து அன்பு காட்ட வேண்டும்! யோவான் 13:34 கூறுகிறது, "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்."


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"