"Sing praises for God's mighty works"

Who is like You, O Lord, among the gods? Who is like You, glorious in holiness, Fearful in praises, doing wonders? Exodus 15:11.

The first song that appears in the Bible is the Song of Moses in Exodus 15. Moses and the Israelites immediately burst into singing after their safe journey across the Red Sea. The people of Israel knew that the Lord is the great God and the great King above all gods. Today's verse tells how they honored God and exalted His name. They praised Him as there is none like Him: majestic in holiness, revered with praises, and performing wonders. We should also remember all His mighty works, His holiness, righteousness, power, praiseworthiness, strength, and miracles. When we know Him more, we will not fear men or the enemy. Our faith will be stronger. Every day, we need to learn new things about Him through His word and exalt His name through our life experiences. Shall we sing a song of praise to the Lord today in response to all He has done to us? 1 Chronicles 16:27 says, "Honor and majesty are before Him; strength and gladness are in His place."

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? யாத்திராகமம் 15:11.

வேதாகமத்தில் காணப்படும் முதல் பாடல் யாத்திராகமம் 15-ல் உள்ள மோசேயின் உன்னதப்பாட்டு ஆகும். செங்கடலைக் கடந்து பத்திரமாகப் பயணம் செய்த பிறகு மோசேயும் இஸ்ரவேலரும் உடனடியாக பாடத் தொடங்கினர். கர்த்தரே மகத்துவமான தேவன் என்றும், எல்லா தேவர்களுக்கும் மேலான மகாராஜா என்றும் இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்தார்கள். இன்றைய வசனம் அவர்கள் தேவனை எவ்வாறு கனப்படுத்தினார்கள், மகிமைப்படுத்தினார்கள் என்பதைக் கூறுகிறது. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளால் மதிக்கப்படுபவரும், அதிசயங்களைச் செய்பவருமான அவரைத் துதித்தார்கள். அவருடைய எல்லா வல்லமையான கிரியைகளையும், அவருடைய பரிசுத்தம், நீதி, சக்தி, புகழ்ச்சி, வல்லமை, மற்றும் அற்புதங்களையும் நாம் நினைவுகூர வேண்டும். நாம் அவரை அதிகம் அறிந்துகொள்ளும்போது, மனுஷருக்கும் சத்துருவுக்கும் பயப்பட மாட்டோம். நம் நம்பிக்கை பலப்படும். ஒவ்வொரு நாளும், நாம் அவருடைய வார்த்தையின் மூலம் அவரைப் பற்றிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, நமது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் அவரது நாமத்தை உயர்த்த வேண்டும். கர்த்தர் நமக்குச் செய்த அனைத்திற்கும் இன்று நாம் அவரைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடலாமா? 1 நாளாகமம் 16:27 சொல்லுகிறது, “மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"