Blog # 338 - "Forgive others as Christ forgave"

Bearing with one another, and forgiving one another, if anyone has a complaint against another; even as Christ forgave you, so you also must do. But above all these things, put on love, which is the bond of perfection. Colossians 3:13,14.

Apostle Paul tells the church at Colossae to bear with one another and forgive one another in love. In Ephesians 4:2, he says that with all lowliness and gentleness, with longsuffering, we should bear with one another in love. We should have these three important characteristics - humility, gentleness, and patience - to practice every day in our lives. In Christ, we forgive each other and accept each other's faults because Jesus has already paid for our sins on the cross and the sins of those who hurt us. If we don't share this forgiveness, resentment, bitterness, and hatred will fill our hearts and sadden the Spirit of God within us. We should treat others as we would treat ourselves. We must stop living with unreasonable expectations of each other. Let's ask God to help us be filled with His love, grace, mercy, and forgiveness through the Holy Spirit! Do you forgive others and accept them as Christ has forgiven you? Romans 15:7 says, "Therefore receive one another, just as Christ also received us, to the glory of God."

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். கொலோசெயர் 3:13,14.

அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெ சபையில் உள்ளவர்களுக்கு  ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளவும், அன்பில் ஒருவரையொருவர் மன்னிக்கவும் கூறுகிறார்.. எபேசியர் 4:2-ல், நாம் சகல மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், நீடிய பொறுமையோடும், அன்பிலே ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய இந்த மூன்று முக்கிய குணாதிசயங்களை நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டும். கிறிஸ்துவில், நாம் ஒருவருக்கொருவர் மன்னித்து, ஒருவருக்கொருவர் குறைகளை ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் இயேசு நம்  பாவங்களுக்கும், நம்மைத்  துன்புறுத்தினவர்களின் பாவங்களுக்கும் ஏற்கனவே சிலுவையில் விலையை செலுத்தியுள்ளார். இந்த மன்னிப்பை நாம் பகிர்ந்து கொள்ளாவிட்டால், கோபம், கசப்பு, வெறுப்பு ஆகியவை நம் இருதயங்களை நிரப்பி, நமக்குள் இருக்கும் தேவ ஆவியை துக்கப்படுத்தும். மற்றவர்களை நம்மைப் போலவே நடத்தவேண்டும். நாம் ஒருவருக்கொருவர் நியாயமற்ற எதிர்பார்ப்புகளுடன் வாழ்வதை நிறுத்த வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் மூலம் அவருடைய அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் மன்னிப்பால் நிரப்பப்பட நமக்கு உதவ தேவனிடம் கேட்போம்! கிறிஸ்து உங்களை மன்னித்ததுபோல நீங்களும் மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?  ரோமர் 15:7 சொல்லுகிறது, “ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"