Blog # 339 - "Wise words bring comfort and peace"

A word fitly spoken is like apples of gold in settings of silver. Proverbs 25:11.

In this verse, King Solomon praised good words spoken at the right time by comparing them to a beautiful scene, like apples of gold in settings of silver. Imagine golden apples in a silver bowl or basket. What a beautiful combination of colors and images! Words well-spoken are just like that. Our words, when used wisely, are precious, valuable, lovely, and unique. The Bible has a lot to say about the power of words. Even Jesus spoke the perfect words wisely at the right time when the Pharisees and Sadducees tried to trap Him with difficult questions. If we walk in the wisdom of God, we can also have God's wisdom to handle difficult situations in our families with our children, spouses, in-laws, friends, and even in our workplaces. When someone is hurt or discouraged, our words of wisdom will comfort, encourage, and bring peace to their lives. Do you use your words wisely to bring comfort and encouragement to others in difficult situations? Colossians 4:6 says, "Let your speech always be with grace, seasoned with salt, that you may know how you ought to answer each one."

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். நீதிமொழிகள் 25:11.

இந்த வசனத்தில், சாலொமோன் ராஜா சரியான நேரத்தில் பேசப்பட்ட நல்ல வார்த்தைகளை, வெள்ளித்தட்டில், தங்க ஆப்பிள் பழங்களைப் போல ஒரு அழகான காட்சியுடன் ஒப்பிட்டு புகழ்ந்தார். ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் அல்லது கூடையில் தங்க ஆப்பிள்களை கற்பனை செய்து பாருங்கள். இது எவ்வளவு அழகான நிறங்களும் படங்களும் கொண்டிருக்கும்! நன்றாகப் பேசும் வார்த்தைகள் அப்படித்தான். நம்முடைய வார்த்தைகளை ஞானமாகப் பயன்படுத்தும்போது, அவை விலைமதிப்பற்றவை, மதிப்புமிக்கவை, அழகானவை, தனித்துவமானவை. வார்த்தைகளின் வல்லமையைப் பற்றி பைபிள் நிறைய சொல்லுகிறது. பரிசேயர்களும் சதுசேயர்களும் கடினமான கேள்விகளால் அவரை சிக்க வைக்க முயன்ற போது, இயேசு கூட சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளை ஞானமாக பேசினார். நாம் தேவனுடைய ஞானத்தின்படி நடந்தால், நம்முடைய குடும்பங்களில் கடினமான சூழ்நிலைகளை நம் பிள்ளைகள், வாழ்க்கை துணைகள், மாமனார், மாமியார், நண்பர்கள் மற்றும் நமது பணியிடங்களில் கூட சரியான வார்த்தைகளை ஞானமாகப் பேச முடியும். யாராவது புண்படும்போது அல்லது சோர்ந்துபோகும்போது, நம்முடைய ஞானமான வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலைத் தரும். கஷ்டமான சூழ்நிலைகளில் மற்றவர்களுக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் கொண்டுவர உங்கள் வார்த்தைகளை ஞானமாகப் பயன்படுத்துகிறீர்களா? கொலோசெயர் 4:6 சொல்லுகிறது: "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"