Blog # 340 - "Living God's Love Through Actions"

By this we know that we love the children of God, when we love God and keep His commandments. 1 John 5:2.

In this scripture, we are reminded that our love for others is deeply connected to our love for God. True love for the people around us flows naturally when we are committed to loving God and following His commandments. This verse tells us that our relationship with God is the key to how we treat others. When we love God, we align our hearts with His, and this alignment helps us to love our brothers and sisters. Keeping God’s commandments is not just about following rules; it’s about living out His love in practical ways, showing kindness, patience, forgiveness, and compassion.  As we strive to love God more fully, let that love extend to those around us. By loving and obeying Him, we become channels of His love, touching the lives around us with grace and truth. Does your love for God influence the way you treat others?  Ephesians 5:2 says, "And walk in love, as Christ also has loved us and given Himself for us, an offering and a sacrifice to God for a sweet-smelling aroma."

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். 1 யோவான் 5:2.

மற்றவர்கள் மீதான நமது அன்பு கடவுள் மீதான நமது அன்புடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த வசனத்தில் நாம் நினைவூட்டப்படுகிறோம். நாம் தேவனை நேசிப்பதிலும், அவரது கட்டளைகளை பின்பற்றுவதிலும் உறுதியாக இருந்தால், நம்மை  சுற்றியுள்ள மக்களை உண்மையிலேயே நேசிக்க இயலும். நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதற்கு தேவனுடனான நமது உறவுதான் முக்கியம் என்று இந்த வசனம் சொல்கிறது. நாம் தேவனை நேசிக்கும்போது, நம்முடைய இருதயங்கள் அவருடன் ஒருமுகமாகிறது; இந்த சீரமைப்பு நம் சகோதர சகோதரிகளை நேசிக்க உதவுகிறது. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வது என்பது விதிகளைப் பின்பற்றுவது மட்டுமல்ல; இது நடைமுறை வழிகளில் அவருடைய அன்பில் வாழ்ந்து, தயவு, பொறுமை, மன்னிப்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றைக் காண்பிப்பதாகும்.  தேவனை இன்னும் முழுமையாக நேசிக்க நாம் முயற்சி செய்யும்போது, அந்த அன்பு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பரவட்டும். அவரை நேசித்து, அவருக்கு கீழ்ப்படிவதால், அவரது அன்பின் வழியாக, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் கிருபையும், உண்மையும் கொண்டு சேர்க்கும் பாலமாக நாம் மாறுகிறோம். கடவுள்மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மற்றவர்களை நீங்கள் நடத்தும் விதத்தில் மாற்றத்தை  ஏற்படுத்துகிறதா?  எபேசியர் 5:2 சொல்லுகிறது, "கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."