Blog # 342 - "Trust in God's help and protection"

You who fear the Lord, trust in the Lord; He is their help and their shield. Psalm 115:11.

This verse encourages those who fear the Lord to trust in Him, as He is their help and shield. We know that the fear of God is not about being afraid of Him; it is about giving Him reverence, honor, and priority in every area of our lives. The image of God as a 'help' and a 'shield' has deep meaning. In the ancient world, a shield was an essential piece of armor that provided protection from enemy attacks. Likewise, God is portrayed as a shield, providing His people with defense against their enemies. Additionally, God as help emphasizes His role as a helper for His people in times of trouble. This conveys a sense of God's active involvement in the lives of those who trust in Him. Are you trusting in God's protection and help in every area of your life? Proverbs 29:25 says, "The fear of man brings a snare, But whoever trusts in the Lord shall be safe."

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். சங்கீதம் 115:11.

இந்த வசனம் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களை அவரில் நம்பிக்கை வைக்க ஊக்குவிக்கிறது, ஏனெனில் அவர் அவர்களுக்கு உதவியாகவும் கேடகமாகவும் இருக்கிறார். தேவனுக்குப் பயப்படுவது அவருக்கு அஞ்சி நடுங்குவது அல்ல; என்பதை நாம் அறிவோம்; இது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அவருக்கு பயபக்தி, மரியாதை மற்றும் முன்னுரிமை கொடுப்பது பற்றியது."துணை" மற்றும் "கேடகம்" என்ற வார்த்தைகள் ஒரு ஆழ்ந்த அர்த்தத்தை உள்ளடக்கியவையாகும். பண்டைய உலகில், ஒரு கேடயம் எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பை வழங்கும் ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தது. அதேபோல், தேவன் ஒரு கேடகமாக சித்தரிக்கப்படுகிறார், அவருடைய மக்களுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பை வழங்குகிறார். மேலும், கர்த்தர் துணையாக இருக்கிறார் என்பதைக் கூறுவதன் மூலம், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஆபத்தில் அவரே உதவியாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தேவனின் பாதுகாப்பையும் உதவியையும் நீங்கள் நம்புகிறீர்களா? நீதிமொழிகள் 29:25 கூறுகிறது, ”மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.”

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 042 - Good News Refreshes the Weary Soul"

"God desires intimate relationship with contrite."

"Believers, you have overcome the world."

Blog # Y2 011 - "Calling on God with Confidence"

Blog # 361 - "Celebrate victories through worship and praise"

"Blog Y2 017 - Shine Your Light for Christ"