Blog # 343 - "Rejoice in God’s abundant provision"

May you be blessed by the Lord, Who made heaven and earth. The heaven, even the heavens, are the Lord’s; But the earth He has given to the children of men. Psalm 115:15,16.

Today's scripture speaks of God's blessings upon us and His authority over all creation. God created the heavens and the earth. The highest heavens belong to the Lord, but the earth He has given to man. This acknowledges God’s continuing dominion over the heavens and over all creation. We should rejoice and bless His name for all the provision, protection, and salvation He provides on earth. Since the beginning, He has been giving. He gave the Garden of Eden to mankind and later provided the means for salvation when man sinned. Even today, everything we possess is given by Him. We don’t own anything; it's all a gift. There is nothing we brought into this world and we take nothing away. We are given everything to enjoy while we are here. We should always remember Him and be thankful. Are you grateful for the blessings and provisions God has given you?  Deuteronomy 10:14 says, "Indeed heaven and the highest heavens belong to the LORD your God, also the earth with all that is in it."

வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். சங்கீதம் 115:15,16.

இன்றைய வேத வசனம்  நம்மீது தேவனுடைய ஆசீர்வாதங்களையும், அனைத்து படைப்புகள் மீதும் அவருடைய அதிகாரத்தையும் பற்றி பேசுகிறது. வானத்தையும், பூமியையும்  தேவன்  படைத்தார். உயர்ந்த வானங்கள் கர்த்தருடையது, ஆனால் பூமியை அவர் மனிதனுக்குக் கொடுத்தார். இது, வானங்கள் மீதும் எல்லா படைப்புகளின் மீதும் தேவனுடைய தொடர்ச்சியான ஆதிக்கத்தை ஒப்புக்கொள்கிறது. பூமியில் அவர் அளிக்கும் பாதுகாப்பு, ஆதரவு, இரட்சிப்பு ஆகியவற்றிற்காக நாம் மகிழ்ச்சியுடன் அவருடைய நாமத்தை துதிக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே, அவர் கொடுத்து வருகிறார். அவர் ஏதேன் தோட்டத்தை மனிதகுலத்திற்கு கொடுத்தார், பின்னர் மனிதன் பாவம் செய்தபோது இரட்சிப்புக்கான வழியை வழங்கினார். இன்றும், நாம் கொண்டுள்ள அனைத்தும் அவரால் கொடுக்கப்பட்டது. நமக்கு எதுவும் சொந்தமில்லை; எல்லாம் ஒரு பரிசு. இந்த உலகத்திலே நாம் எதையும் கொண்டுவந்ததுமில்லை, எதையும் கொண்டு போவதுமில்லை. நாம் இங்கு இருக்கும்போது அனுபவிக்க எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எப்போதும் அவரை நினைத்து நன்றி செலுத்த வேண்டும். தேவன் உங்களுக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்கும் பொருள்களுக்கும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? உபாகமம் 10:14 கூறுகிறது,  “இதோ, வானங்களும் வானாதி வானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.”






 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."