Blog # 352 - "Uplift others with encouraging words"

Anxiety in the heart of man causes depression, But a good word makes it glad. Proverbs 12:25.

Scripture says that pleasant words are like a honeycomb, sweet to the soul and healthy to the bones. The good word is the Word of God, the source of gladness in the face of anxiety. An encouraging word can be a blessing that cheers the anxious, lifts the disappointed, and comforts the downhearted. There is power in the Word of God; when we speak it to an anxious person or over a situation, changes happen. It brings joy into the lives of people. The tongue has the power of life and death; good people use it for health and life. Just as Jonathan, the son of King Saul, encouraged David when he was hiding in the woods, our goal should be to encourage and build up one another. Are you using your words to encourage and uplift others, bringing joy and comfort to those around you?  Ephesians 4:29 says: “Let no corrupt word proceed out of your mouth, but what is good for necessary edification, that it may impart grace to the hearers.”

மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். நீதிமொழிகள் 12:25.

இனிய வார்த்தைகள் தேன்கூடுபோலவும், ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஆரோக்கியமுமுமாயிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. நல்ல வார்த்தை தேவனுடைய வார்த்தை, மனக் கவலையான முகத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். ஊக்கத்தினை கொடுக்கும் வார்த்தை, கவலையடைந்தவர்களை மகிழ்விக்கவும், விரக்தியடைந்தவர்களை உயர்த்தவும், மனச்சோர்வடைந்தவர்களை ஆறுதல் படுத்தவும்,  ஆசீர்வாதமாகவும்  இருக்கலாம். தேவனுடைய வார்த்தையில் வல்லமை இருக்கிறது; ஒரு பதட்டமான நபரிடம் அல்லது ஒரு கவலையான சூழ்நிலையில் நாம் அதைப் பேசும்போது, மாற்றங்கள் நிகழ்கின்றன. அது மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; நல்லவர்கள் அதை ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பயன்படுத்துகிறார்கள். சவுல் ராஜாவின் மகன் யோனத்தான் தாவீது காட்டில் ஒளிந்திருந்தபோது அவரை உற்சாகப்படுத்தினார். அதேபோல், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதும் பலப்படுத்துவதுமே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொண்டுவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும், மேம்படுத்தவும், உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களா?  எபேசியர் 4:29 கூறுகிறது: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"