Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

Blessed be the God and Father of our Lord Jesus Christ, who has blessed us with every spiritual blessing in the heavenly places in Christ, Ephesians 1:3.

This verse explains why and how we should praise God for every spiritual blessing. We thank and praise God for sending His only Son, Jesus Christ, to die for our sins and to grant us eternal life. Our loving Father is full of grace, kindness, forgiveness, redemption, salvation, freedom, wisdom, and understanding. Through Jesus Christ, His Son, He shares these riches with us. This is the spiritual blessing in the heavenly places in Christ. Now, let us consider how to praise Him. After recognizing who He is, we should search our hearts and keep ourselves pure and clean before our Holy God. We must worship Him with all our heart, mind, and strength, offering joyful songs. He expects us to worship Him in spirit and in truth. How are you praising and worshipping God for His spiritual blessings in your life?  Psalm 29:2 says: “Give unto the Lord the glory due to His name; Worship the Lord in the beauty of holiness.”

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1:3.

ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்காகவும் நாம் ஏன், எப்படி தேவனைத் துதிக்க வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது. தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புவித்து, நமக்கு நித்திய ஜீவனை வழங்கினத்திற்காக  தேவனுக்கு நன்றி செலுத்தி துதிப்போம். நம்முடைய பரம பிதா கிருபை, தயவு, மன்னிப்பு, மீட்பு, இரட்சிப்பு, விடுதலை, ஞானம் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர். தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இந்த ஆவிக்குரிய ஐசுவரியங்களை அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். இவைகள் கிறிஸ்துவுக்குள் பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். இப்போது, அவரை எவ்வாறு துதிப்பது என்று சிந்திப்போம். அவர் யார் என்பதை உணர்ந்து, நமது இருதயங்களை ஆராய்ந்து, நமது பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்மை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான பாடல்களப் பாடி, நாம் அவரை நமது முழு இருதயத்தோடும், மனதோடும், பெலத்தோடும் ஆராதிக்க வேண்டும். நாம் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் எவ்வாறு தேவனைத் துதித்து ஆராதிக்கிறீர்கள்? சங்கீதம் 29:2 கூறுகிறது: “கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.”

 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 358 - "Trust in God's unchanging power"

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

Blog # 359 - "Trust in God's mighty power"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 357 - "Sow peace to reap righteousness."

Blog # 360 - "Enemies flee when prayers rise"

Blog # Y2 008 - "How to listen God's voice Daily"