Blog # 359 - "Trust in God's mighty power"

Behold, God is mighty, but despises no one; He is mighty in strength of understanding. Job 36:5.

Today’s scripture speaks of how mighty our God is and of His strength and understanding. When trouble comes, we often focus more on the problem than on the mighty power of God, and we get discouraged easily. But God expects us to remember and praise Him, that He is all-powerful, strong, and mighty and praise Him. He has the power to control nature, the universe, and all of creation. He sent His only Son into the world to crush the enemy's head at the cross. King David could easily defeat the giant Goliath, revealing the power of God as greater than that of the enemy. We should always remember that our God is the Lord of Hosts, and who is victorious. When we have faith in God and His might, we will see miracles in our lives. Are you remembering to focus on God's mighty power and strength in times of trouble, trusting in His ability to bring victory and miracles into your life?  Psalm 24:8 says: "Who is this King of glory? The Lord strong and mighty, The Lord mighty in battle."

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். யோபு 36:5.

இன்றைய வசனம் நம்முடைய தேவன் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்பதையும், அவருடைய புரிந்து கொள்ளும் ஆற்றலைக் குறித்தும் பேசுகிறது. நாம் பிரச்சனைகள் வரும்போது, ​​தேவனின் வல்லமையை விட பிரச்சனையில் அதிக கவனம் செலுத்துகிறோம், அதனால் நாம் எளிதில் சோர்ந்துபோகிறோம். ஆனால் தேவன், சர்வ வல்லமையுள்ளவர், மகத்துவமானவர் என்பதை நாம் நினைவில் வைத்து  அவரை துதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இயற்கை, பிரபஞ்சம், அனைத்து படைப்புகளையும் கட்டுப்படுத்தும் சக்தி அவருக்கு உள்ளது. சிலுவையில் சத்துருவின் தலையை நசுக்க அவர் தனது ஒரே குமாரனை உலகிற்கு அனுப்பினார். தாவீது ராஜாவால் ராட்சதனான கோலியாத்தை எளிதில் தோற்கடிக்க முடிந்தது, தேவனுடைய வல்லமை, எதிரியை விட பெரியது என்பதை வெளிப்படுத்தியது. நம்முடைய தேவன் சேனைகளின் கர்த்தர், வெற்றி பெறுபவர் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் தேவனையும் அவருடைய வல்லமையையும் விசுவாசிக்கும்போது, நம் வாழ்வில் அற்புதங்களைக் காண்போம். நெருக்கடியின்போது தேவனுடைய வல்லமையையும் பெலத்தையும் நம்பி, உங்களின் வாழ்க்கையில் வெற்றியும் அதிசயங்களும் நிகழ்வதற்காக நீங்கள் அவரில் கவனம் செலுத்துகிறீர்களா? சங்கீதம் 24:8 கூறுகிறது: “யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"