"Blog Y2 022 - Honor God's Greatness and Holiness"

Great is the Lord, and greatly to be praised in the city of our God, in His holy mountain. Psalm 48:1.

This verse speaks about how great God is and how deserving He is of praise. The first part talks about God’s greatness, highlighting His power and how awe-inspiring He is. Throughout the Bible, God is described as great in His power, love, and mercy. The second part of the verse mentions the city of God and the mountain of His holiness, symbolizing God’s presence and His holy nature. It represents a place where God is honored, and His holiness is recognized. This verse reminds us to acknowledge God’s greatness in our lives and give Him the praise He deserves. Will you honor God and follow His holiness in your life? Psalm 99:2,3 says:  "The Lord is great in Zion, And He is high above all the peoples. Let them praise Your great and awesome name—He is holy."

கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். சங்கீதம் 48:1.

இந்த வசனம் தேவன் எப்படிப்பட்டவர் என்றும், அவர் துதிக்குப்  பாத்திரர் என்பதைப் பற்றியும் பேசுகிறது. முதல் பகுதி தேவனுடைய மகத்துவத்தையும், அவருடைய வல்லமையையும், அவர் பிரம்மிக்கப் படத்தக்கவர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. வேதாகமம் முழுவதும், தேவன் ஆற்றல், அன்பு மற்றும் கிருபை ஆகியவற்றில் பெரியவராக விவரிக்கப்படுகிறார். இரண்டாம் பகுதி தேவனின் நகரத்தையும் அவருடைய பரிசுத்த பர்வதத்தையும் குறிப்பிட்டு, தேவனின் சந்நிதி மற்றும் அவரது பரிசுத்த தன்மையைக்குறிக்கிறது. இது தேவன் போற்றப்படுகிற இடத்தையும், அவரது பரிசுத்தம் அறியப்பட்ட இடத்தையும் வெளிப்படுத்துகிறது. இது தேவன் கனப்படுத்தப் படுகிறதையும், அவருடைய பரிசுத்தம் அங்கீகரிக்கப் படுகிறதையும் குறிக்கிறது. இந்த வசனம் நம் வாழ்வில் தேவனுடைய மகத்துவத்தை ஒப்புக்கொண்டு அவருக்கு தகுதியான துதியைக் செலுத்த  நம்மை நினைவூட்டுகிறது. நீங்கள் தேவனை கனம்பண்ணி, உங்கள் வாழ்க்கையில் அவருடைய பரிசுத்தத்தைக்  கடைப்பிடிப்பீர்களா? சங்கீதம் 99:2,3 கூறுகிறது: “கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர். மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.”





 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"