"Blog Y2 025 - Embrace God's wisdom for eternal life."

He who gets wisdom loves his own soul; He who keeps understanding will find good. Proverbs 19:8.

This scripture talks about how to love ourselves. We love our own soul by protecting and guarding it from self-oppression. We need to save our souls from eternal death, and only then we can help others. How will we save others if we don’t have the wisdom to save ourselves? We must embrace godly wisdom and understanding. Divine wisdom is God's perfect, eternal knowledge and understanding, guiding us in truth and righteousness and aligning our lives with His will. As we do this, we are actively loving our own soul! How do we save our soul? Remember that Jesus said if we try to save our earthly lives, we will lose them. But if we lose our lives for Jesus' sake and the gospel’s sake, we will save them. Jesus embraces a view of life that focuses on our eternal life and that of those around us. Anyone who lives this way will find life good, as this life aligns with God’s wisdom. Will you embrace godly wisdom to save your soul and live for Christ?  1 Peter 3:10 says: "For “He who would love life And see good days, Let him refrain his tongue from evil, And his lips from speaking deceit."

ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். நீதிமொழிகள் 19:8.

இந்த வசனம் நாம்  நம்மை எப்படி நேசிப்பது என்பதைப் பற்றி பேசுகிறது. நம்பிக்கையற்ற செய்திகளிலிருந்து நமது சொந்த ஆத்துமாவைப் பாதுகாப்பதன் மூலம் நாம் அதை நேசிக்கிறோம். நாம் நித்திய மரணத்திலிருந்து நமது ஆத்துமாக்களை காப்பாற்ற வேண்டும், அப்போதுதான் நாம் மற்றவர்களுக்கு உதவ முடியும். நம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் ஞானம் நமக்கு இல்லையென்றால், மற்றவர்களை எப்படிக் காப்பாற்றுவோம்? நாம் தெய்வீக ஞானத்தையும் புத்தியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தெய்வீக ஞானம் என்பது தேவனின் பரிபூரண, நித்திய அறிவு மற்றும் புத்தி, இது நம்மை சத்தியத்திலும் நீதியிலும் வழிநடத்தி, அவருடைய சித்தத்துடன் நம் வாழ்க்கையை சீரமைக்கிறது. நாம் இதைச் செய்யும்போது, ​​நம் சொந்த ஆத்துமாவை நேசிக்கிறோம்! நம்முடைய  ஆத்துமாவை எப்படி காப்பாற்றுவது? தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான் என்று இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நித்திய ஜீவனையும்  மையமாகக் கொண்ட ஒரு நோக்கம் உடையவராகக் காணப்படுகிறார். இந்த வாழ்க்கை தேவனுடைய ஞானத்துடன் ஒத்துப்போவதால் இந்த வழியில் வாழும் எவரும் நல் வாழ்க்கை வாழ்வார்கள். உங்கள் ஆத்துமாவை இரட்சித்து கிறிஸ்துவுக்காக வாழ தேய்வீக ஞானத்தை ஏற்றுக்கொள்வீர்களா? 1 பேதுரு 3:10 சொல்லுகிறது: "ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 028 - Children of God Through His Mercy"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 019 - God's Promise of Restoration and Protection."

"Blog Y2 016 - Wise Counsel Leads to Success"

"Blog Y2 030 - Trusting God as our Shield"

"Blog Y2 031 - Live in Unity and Selfless Love"