"Blog Y2 027 - Victory Comes from God Alone"

For I will not trust in my bow, nor shall my sword save me. But You have saved us from our enemies, and have put to shame those who hated us. Psalm 44:6,7.

In these verses, the psalmist reminds us where our true strength lies. It's easy to rely on our own abilities, resources, or strategies when facing challenges. The 'bow' and 'sword' represent human efforts—things we often turn to for security or success. However, the psalmist declares that victory doesn’t come from these but from God alone. This passage challenges us to shift our trust from ourselves to God. When we face battles, whether physical, emotional, or spiritual, it’s not our strength that secures the victory but God’s power working on our behalf. Just as He delivered His people from Egypt, God is faithful in fighting for us and bringing us out through our life’s struggles. Not only that, but our God is also capable of putting our enemies and those who hate us to shame. When we realize our bow and sword can't achieve what God can, we will not hesitate to say, “In God we boast.” Do you trust in your own strength or rely on God’s power to secure victory in your life’s battles?  Zechariah 4:6 says: “Not by might nor by power, but by My Spirit, Says the Lord of hosts.”

என் வில்லை நான் நம்பேன்; என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர். சங்கீதம் 44:6,7.

இந்த வசனங்களில், நமது உண்மையான பலம் எங்கே இருக்கிறது என்பதை சங்கீதக்காரன் நமக்கு நினைவூட்டுகிறார். சவால்களை எதிர்கொள்ளும்போது நமது சொந்த திறன்கள், நம்மிடமிருக்கும் மூலாதாரம்  அல்லது எதிர்நோக்கு திட்டங்களை நம்புவது எளிது. நம்மிடம் உள்ள பட்டயங்கள், மனித முயற்சிகளைக் குறிக்கின்றன—பாதுகாப்பு அல்லது வெற்றிக்காக நாம் அடிக்கடி உபயோகிப்பவை. ஆனால், சங்கீதக்காரர் வெற்றி இவற்றினால் வருவதில்லை, தேவனிடமிருந்து மட்டுமே வரும் என்று அறிவிக்கிறார். இந்த வசனங்கள்  நம் நம்பிக்கையை நம்மிடமிருந்து தேவனிடம் மாற்ற உந்துகிறது. உடல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ நாம் போராட்டங்களை எதிர்கொள்ளும்போது, நம் பலம் அல்ல, தேவனின் ஆற்றல் நமக்காக வேலை செய்து வெற்றி அடையச்  செய்கிறது. அவர் தம்முடைய ஜனங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்தது போல, தேவன் நமக்காக போராடவும், நமது வாழ்க்கையின் போராட்டங்கலிருந்து  நம்மை வெளியே கொண்டு வரவும் உண்மையுள்ளவராக இருக்கிறார். அதுமாத்திரமல்ல, நம்முடைய எதிரிகளையும் நம்மை வெறுப்பவர்களையும் அவமானப்படுத்த தேவன் வல்லவராயிருக்கிறார். நமது வில்லும் வாளும் சாதிக்க முடியாததை தேவனால் சாதிக்க முடியும்  என்பதை நாம் உணரும்போது, “தேவனில் நாங்கள் பெருமை பாராட்டுகிறோம்” என்று சொல்ல தயங்க மாட்டோம். உங்கள் சொந்த பலத்தில் நீங்கள் நம்பிக்கை வைக்கிறீர்களா அல்லது உங்கள் வாழ்க்கையின் போராட்டங்களில் வெற்றியைப் பெற தேவனுடைய வல்லமையை சார்ந்திருக்கிறீர்களா? சகரியா 4:6 கூறுகிறது: "அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”



Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"