"Blog Y2 029 - Trust God's Timing and Power"

I know that You can do everything, and that no purpose of Yours can be withheld from You. Job 42:2.

This is a promise of God for us today. Job declared this timeless truth when he said that God can do everything. Our God is Almighty! He is our Sovereign God, in control of everything. God is always with us, and He is aware of everything that happens to us. While God does not cause difficulties, He does allow them. No purpose of God can be withheld from Him, and no one can stop the blessings He has stored for His children. However, when we go through life's problems, we often forget what God has already done for us. When things are delayed or not happening on time, we may lose faith in God. Yet our faithful God does everything beautifully in His time when we put our trust in Him and wait for His timing. We must believe that our God is all-powerful and that He will do great things. Do you believe that nothing is impossible for our God? Matthew 19:26 says: “With men this is impossible, but with God all things are possible.” 

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2.

இது இன்று நமக்கு தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தம். தேவன் எல்லாவற்றையும் செய்யக்கூடியவர் என்று யோபு இந்த அழியாத சத்தியத்தை அறிவித்தார். நம் தேவன் சர்வ வல்லமையுள்ளவர்! எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறார். தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார், நமக்கு நடக்கும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். தேவன் பாடுகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும், அவர் அவற்றை அனுமதிக்கிறார். தேவனுடைய எந்த நோக்கமும் அவரிடமிருந்து தடுக்கப்பட முடியாது, அவருடைய பிள்ளைகளுக்காக அவர் சேமித்து வைத்துள்ள ஆசீர்வாதங்களையும் யாராலும் தடுக்க முடியாது. எனினும், வாழ்க்கையின் பிரச்சினைகளில் நாம் சென்றுகொண்டிருக்கும்போது, தேவன் ஏற்கனவே நமக்காக செய்ததை மறந்து விடுகிறோம். காரியங்கள் தாமதமாகும்போது அல்லது சரியான நேரத்தில் நடக்காதபோது, நாம் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடலாம். ஆயினும் நம்முடைய உண்மையுள்ள தேவன் நாம் அவரில் நம்பிக்கை வைத்து அவருடைய நேரத்திற்காக காத்திருக்கும்போது அவருடைய காலத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்கிறார். நம்முடைய தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்றும், அவர் பெரிய காரியங்களைச் செய்வார் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா? மத்தேயு 19:26 சொல்லுகிறது: “இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."