"Blog Y2 044 - God's Mercy Endures Through All."

Who remembered us in our lowly state, For His mercy endures forever. Psalm 136:23.

This psalm is a hymn of thanksgiving for God's enduring love and constant presence. The repetition of the phrase "for His mercy endures forever" at the end of each verse in this psalm serves as a reminder of God's unconditional love and care for us. Today's verse speaks about God's faithfulness and unchanging nature, as well as the hope and reassurance that His mercy is always available to those in need. The phrase "in our lowly state" conveys the idea of being in a state of poverty, oppression, or helplessness. It reminds us that God remembers us in our weakness and suffering, and He extends His mercy toward us. In this world, we sometimes feel all alone, but He is with us in our lowly state. Are you trusting in God's mercy and presence during times of weakness or loneliness? Lamentations 3:22-23 says: “Through the Lord’s mercies we are not consumed, Because His compassions fail not. They are new every morning, Great is Your faithfulness.”

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:23.

இந்த சங்கீதம் தேவனின் நீடித்த அன்பு மற்றும் நிலையான பிரசன்னத்திற்காக நன்றி செலுத்தும் பாடலாகும். இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் "அவர் கிருபை என்றுமுள்ளது" என்ற சொற்றொடரை மீண்டும் மீண்டும் சொல்வது, தேவன் நம்மீது கொண்டுள்ள நிபந்தனையற்ற அன்பையும் அக்கறையையும் நினைவூட்டுகிறது. இன்றைய வசனம் தேவனுடைய உண்மையையும் மாறாத தன்மையைப் பற்றியும், அவருடைய இரக்கம் தேவைப்படுகிறவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் பற்றி பேசுகிறது. "நம்முடைய தாழ்வில்" என்ற சொற்றொடர் வறுமை, அநீதி அல்லது உதவியற்ற நிலையில் இருப்பதன் கருத்தை வெளிப்படுத்துகிறது. நம்முடைய பலவீனத்திலும் பாடுகளிலும் தேவன் நம்மை நினைவுகூர்ந்து, நம்மீது தமது இரக்கத்தை நல்குகிறார் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இந்த உலகத்தில், நாம் சில நேரங்களில் தனிமையை உணர்கிறோம், ஆனால் அவர் நமது தாழ்ந்த நிலையில் நம்மோடு இருக்கிறார். பலவீனம் அல்லது தனிமை நேரங்களில் தேவனின் இரக்கத்தையும் பிரசன்னத்தையும் நீங்கள் நம்புகிறீர்களா? புலம்பல் 3:22-23 கூறுகிறது: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.”




 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"