"Blog Y2 050 - Crave for the Pure Spiritual Word"

As newborn babes, desire the pure milk of the word, that you may grow. 1 Peter 2:2.

Apostle Peter says that we must grow in our salvation. Babies grow by drinking milk, which provides all the nourishment their bodies need in the early months of life. But it has to be good milk. Using this as an illustration, Peter refers to the "pure spiritual milk" of God's Word. We must learn to crave the undiluted Word of God, just as a newborn craves milk. By drinking this spiritual milk—taking in God's Word and drawing close to Christ—we will continue to grow in our salvation. Our growth should produce fruit and help others grow and bear fruit as well. How is your spiritual growth? Are you thirsty for the Word of God? Colossians 2:6,7 says: “As you therefore have received Christ Jesus the Lord, so walk in Him,  rooted and built up in Him and established in the faith, as you have been taught, abounding in it with thanksgiving.”

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.1 பேதுரு 2:3. 

நம்முடைய இரட்சிப்பில் நாம் வளர வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். பால் குடிப்பதன் மூலம் குழந்தைகள் வளரும். இது வாழ்க்கையின் ஆரம்ப மாதங்களில் அவர்களின் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. ஆனால் அது நல்ல பாலாக இருக்க வேண்டும். இதை ஒரு உவமையாகப் பயன்படுத்தி, பேதுரு தேவனுடைய வார்த்தையை "தூய ஆவிக்குரிய பால்" என்று குறிப்பிடுகிறார். புதிதாகப் பிறந்த குழந்தை பாலில் வாஞ்சையாக  இருப்பது போல, கலப்படம் இல்லாத  தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ள நாம் ஆசைப்படவேண்டும். இந்த ஆவிக்குரிய பாலைக் குடித்து, தேவனுடைய வார்த்தையில் வளர்ந்து, கிறிஸ்துவிடம் நெருங்கி வருவதன் மூலம், நமது இரட்சிப்பில் தொடர்ந்து வளருவோம். நமது வளர்ச்சி கனிகளை கொடுப்பதோடு மற்றவர்களும் கனி கொடுத்து வளர உதவ வேண்டும். உங்கள் ஆன்மீக வளர்ச்சி எப்படி இருக்கிறது? தேவனுடைய வார்த்தைக்காக நீங்கள் தாகத்தோடு இருக்கிறீர்களா? கொலோசெயர் 2:6,7 சொல்லுகிறது: “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,  நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.”


Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."