"Blog Y2 053 - Walking with God toward perfection"
Therefore you shall be perfect, just as your Father in heaven is perfect. Matthew 5:48.
Jesus teaches that God's standard of righteousness is complete and flawless: we must aim to be perfect, just as our heavenly Father is perfect. He doesn’t expect us to be perfect in the sense that we never sin. He knows we sin and has made provision for that through Jesus’ high priestly work. God's eternal plan for humanity is designed in such a way that we are unable to obey His commands in our own strength, but He allows us to attempt to reach perfection. He knows our fleshly efforts will ultimately end in failure! In Genesis 6:9, the Bible describes Noah as "A just man, perfect in his generations." Noah walked with God. Like Noah, walking with God and faithfully following His words will lead us toward perfection. Do you strive to walk with God toward perfection, like Noah? 2 Samuel 22:31 says: "As for God, His way is perfect; The word of the LORD is proven; He is a shield to all who trust in Him."
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். மத்தேயு 5:48.
தேவனுடைய நீதியானது முழுமையும் குற்றமற்றது என்று இயேசு கற்பிக்கிறார்: நம்முடைய பரம பிதா பரிபூரணமாக இருப்பதைப் போலவே நாமும் பரிபூரணமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் ஒருபோதும் பாவம் செய்யாதவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. நாம் பாவம் செய்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார், இயேசு பிரதான ஆசாரியனாக நமக்காக பரிந்து பேசுவதின் மூலம் அதற்கான பரிகாரம் செய்கிறார். மனிதகுலத்திற்கான தேவனின் நித்திய திட்டம் நம்முடைய சொந்த பெலத்தில் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் பரிபூரணத்தை அடைய முயற்சிக்க அவர் நம்மை அனுமதிக்கிறார். நமது மாம்ச முயற்சிகள் இறுதியில் தோல்வியில் முடிவடையும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்! ஆதியாகமம் 6:9-ல், வேதாகமம் நோவாவை "நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்" என்று விவரிக்கிறது. நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். நோவாவைப் போலவே, தேவனுடன் சஞ்சரித்து அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியுங்கள், அது நம்மை பரிபூரணத்திற்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும். நோவாவைப் போல, நீங்கள் தேவனுடன் பரிபூரணமாக நடக்க முயற்சிக்கிறீர்களா? 2 சாமுவேல் 22:31 கூறுகிறது: “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.”
Comments
Post a Comment