"Blog Y2 058 - Walking Humbly in God’s Wisdom"
The fear of the Lord is the instruction of wisdom, And before honor is humility. Proverbs 15:33.
This verse describes the concept of fearing God, which involves accepting His wisdom and teachings and cultivating a good relationship with Him. The fear of the Lord is an honor to Him and His power, a deep respect for His commandments and laws, and a reverent regard for His discipline. Humility means setting aside our own thoughts and opinions to be taught by God. It is the ability to accept correction, confess our faults, and change our ways based on God’s guidance. It requires the discipline to remain silent, avoid conflicts, and forgive others for their offenses against us. Do you fear God and humble yourself so that He may lift you up? Proverbs 29:23 says: “A man’s pride will bring him low, but the humble in spirit will retain honor.”
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. நீதிமொழிகள் 15:33.
இந்த வசனம் தேவனுக்குப் பயப்படுதல் என்ற கருத்தை விவரிக்கிறது, இது அவருடைய ஞானத்தையும் போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அவருடன் நல்ல உறவை வளர்ப்பதை உள்ளடக்கியது. கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்குப் துதியும், அவரது ஆற்றலுக்கும் மரியாதையையும், அவரது கற்பனைகளுக்கும் சட்டங்களுக்கும் ஆழ்ந்த மதிப்பையும், அவரது ஒழுங்குகளுக்கு மரியாதையையும் கொடுப்பதாகும். மனத்தாழ்மை என்பது நம்முடைய சிந்தனைகளையும் கருத்துக்களையும் தாழ்த்தி கடவுளின் போதனைகளை ஏற்கின்ற பண்பாகும். இது நம்மை சரிப்படுத்த ஏற்றுக்கொள்வதற்கும், நமது குற்றங்களை அறிக்கையிடுவதற்கும், தேவனின் வழிநடத்துதலின் அடிப்படையில் நமது வழிகளை மாற்றுவதற்கும் உள்ள தகுதியாகும். சண்டைகளில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கவும், நம்மீது குற்றஞ்சாட்டியவர்களை மன்னிக்கவும் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் தேவனுக்கு பயந்து, அவர் உங்களை உயர்த்தும் அளவுக்கு தாழ்மையாக இருக்கிறீர்களா? நீதிமொழிகள் 29:23 கூறுகிறது: "மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.”
Comments
Post a Comment