"Blog Y2 060 - Love that goes beyond Nature"
Love your enemies, bless those who curse you, do good to those who hate you, and pray for those who spitefully use you and persecute you. Matthew 5:44.
In this scripture, Jesus challenges us to a love that goes beyond our natural reactions—an unnatural love that calls us to love our enemies, bless those who curse us, do good to those who hate us, and pray for those who mistreat us. This doesn’t mean ignoring the hurt or excusing wrongs, but rather choosing forgiveness and trusting God with our pain. Each time we respond with kindness instead of bitterness, we reflect Christ’s love and open a path to healing. Today, let us commit to this love, asking God to soften our hearts and help us bring His grace to a world in need. Apostle Peter reminds us to live out our calling in I Peter 3:9: “Not returning evil for evil or reviling for reviling, but on the contrary blessing, knowing that you were called to this, that you may inherit a blessing.”
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44.
இந்த வசனத்தில், நமது இயல்பான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அன்புக்கு இயேசு நம்மை அழைக்கிறார் - இயற்கைக்கு மாறான அன்பினால், நம் எதிரிகளை நேசிக்கவும், நம்மை சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும், நம்மை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யவும், நம்மை தவறாக நடத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் இயேசு கற்பிக்கிறார். இது காயத்தை கண்டுகொள்ளாமலிருப்பது அல்லது தவறுகளை மன்னிப்பது என்று அர்த்தமல்ல, மாறாக நம் வலியுடன் தேவனை நம்பி மன்னிப்பை நாடவேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் கசப்புக்கு பதிலாக தயவுடன் பதிலளிக்கும்போது, கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கிறோம் மற்றும் ஒப்புரவாகிறதற்கான வழியை உண்டாக்குகிறோம். இன்று, இந்த அன்புக்கு ஒப்புக்கொடுத்து, நம் இருதயங்களை மென்மையாக்கி, தேவையோடு இருக்கின்ற உலகத்திற்கு அவருடைய கிருபைக்காக ஜெபிப்போம். அப்போஸ்தலன் பேதுரு 1 பேதுரு 3:9-ல் நம்முடைய அழைப்பின்படி வாழ நமக்கு நினைவூட்டுகிறார்: “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.”
Comments
Post a Comment