"Blog Y2 061 - Finding Joy in God's Word"
Blessed is the man, ……… his delight is in the law of the Lord, And in His law he meditates day and night. Psalm 1:1,2
This scripture says that a child of God will delight in the word of God by meditating on it day and night. The Hebrew word for “delight” means “extreme pleasure, satisfaction, or joy.” Reading, studying, and applying God’s truth is a source of joy for the righteous. To delight in God’s word means to love it deeply, to hunger and thirst for Him. We delight in His word because we know it has the power to sustain us with joy through times of despair. It brings hope, comfort, protection, and victory over sin and leads us to eternal life. Do you delight in God's word by meditating on it day and night? Joshua 1:8 says: "This Book of the Law shall not depart from your mouth, but you shall meditate in it day and night, that you may observe to do according to all that is written in it. For then you will make your way prosperous, and then you will have good success."
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:2.
தேவனுடைய பிள்ளைகள் இரவும் பகலும் தேவனுடைய வார்த்தையை தியானிப்பதன் மூலம் மகிழ்ச்சியடைவார்கள் என்று இந்த வசனம் கூறுகிறது. "மகிழ்ச்சி (delight)" என்பதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம் "அளவுகடந்த இன்பம், திருப்தி அல்லது சந்தோஷம்." தேவனுடைய சத்தியத்தை வாசிப்பதும், ஆராய்வதும், அதைப் பயன்படுத்துவதும் நீதிமானுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தேவனுடைய வார்த்தையில் மகிழ்வது என்பது, அதை ஆழமாக நேசிப்பதும், தேவனுக்காக பசியும் தாகமும் கொண்டிருப்பதுமாகும். துன்ப நேரங்களில் நம்மை மகிழ்ச்சியுடன் தாங்கும் வல்லமை அவருடைய வார்த்தைக்கு உண்டு என்பதை நாம் அறிந்திருப்பதால் மகிழ்ச்சியடைகிறோம். அது நம்பிக்கை, ஆறுதல், பாதுகாப்பு மற்றும் பாவத்தின் மீது வெற்றி ஆகியவற்றைக் கொண்டுவந்து நித்திய ஜீவனுக்கு நம்மை வழிநடத்துகிறது. தேவனுடைய வார்த்தையை இரவும் பகலும் தியானித்துப் பார்ப்பதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா? யோசுவா 1:8 சொல்லுகிறது: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”
Comments
Post a Comment