"Blog Y2 065 - Reverence and Humility Before the Lord."
Tremble, O earth, at the presence of the Lord, At the presence of the God of Jacob, Who turned the rock into a pool of water, The flint into a fountain of waters. Psalm 114:7,8.
This scripture calls on the earth, or its people, to tremble at the presence of the Lord, the God of Jacob, who performed miracles for the Israelites in the wilderness. Why should we tremble before Him? God is indeed loving and forgiving, yet He is also holy and just, calling His children to holiness. Without Jesus' sacrifice, none of us could stand before God without being judged for sin. Believers are to approach God with humility and repentance, recognizing His supreme authority over all creation and acknowledging that, without His mercy, we deserve only judgment. True reverence for God includes trembling at His power and turning from sin, allowing Jesus to cleanse us and fill us with the Holy Spirit to live righteously. Are you approaching God with true reverence and humility? As Psalm 2:11 says: "Serve the LORD with fear, and rejoice with trembling.
பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். சங்கீதம் 114:7,8.
வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு அற்புதங்களைச் செய்த யாக்கோபின் தேவனாகிய கர்த்தரின் பிரசன்னத்தைக் கண்டு நடுங்கும்படி இந்த வசனம் உலகத்தை அல்லது அதன் ஜனங்களை அழைக்கிறது. அவர் முன் நாம் ஏன் நடுங்க வேண்டும்? தேவன் உண்மையில் அன்புள்ளவர், மன்னிக்கிறவர், ஆனாலும் அவர் பரிசுத்தரும் நீதியுள்ளவருமாயிருக்கிறார், தம்முடைய பிள்ளைகளை பரிசுத்தத்திற்கு அழைக்கிறார். இயேசுவின் சிலுவை மரணமாகிய பலி இல்லாமல், பாவத்திற்காக நியாயந்தீர்க்கப்படாமல் நம்மில் யாரும் தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது. தேவனுடைய சிருஷ்டிப்பின் மீதான முழு அதிகாரத்தை நினைத்து, விசுவாசிகள் தாழ்மையுடனும் மனஸ்தாபத்துடனும் தேவனை அணுக வேண்டும், அவருடைய இரக்கம் இல்லாமல், நாம் நியாயத்தீர்ப்புக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையான பயபக்தி என்பது, தேவனுடைய வல்லமைக்கு நடுங்கி, பாவத்திலிருந்து மனம்திரும்பி, இயேசுவால் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியில் நிறைந்து, நீதியாக வாழ்வதாகும். நீங்கள் உண்மையான பயபக்தியுடனும் தாழ்மையுடனும் தேவனை அணுகுகிறீர்களா? சங்கீதம் 2:11 கூறுகிறது: “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.”
Comments
Post a Comment