"Blog Y2 067 - God's Blessings for the Reverent."
He will bless those who fear the Lord, Both small and great. Psalm 115:13.
God's blessing is for those who fear the Lord – those who love and reverence their heavenly Father. This blessing is for both small and great alike; the only qualification is a godly fear of the Lord. With such assurance, those who fear the Lord can face whatever the future brings. All we have to do is give Him our highest praise and worship, no matter the circumstances, knowing that He fulfills His promises. The love of God is unbelievable, amazing, and unconditional. He is the God who created the universe and the most important Father we could ever have. He assures us through His Word. Remember, there are billions of human beings in the world, yet God is conscious of those who fear Him. For Him to say He is aware of us and cares for us is the best news we could ever hear in our lives. Do you have the qualification for receiving God's blessing according to this passage? Proverbs 19:23 says: ”The fear of the LORD leads to life, And he who has it will abide in satisfaction; He will not be visited with evil.”
கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். சங்கீதம்115:13.
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கும், பரம் பிதாவை நேசித்து பயபக்தியோடு இருப்பவர்களுக்கும் தேவனின் ஆசீர்வாதம் உண்டு. இந்த ஆசீர்வாதம் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே மாதிரியானது; தேவபயம் எனும் தகுதி மட்டுமே அவசியம். இப்படிப் பட்ட உறுதியுடன், தேவனுக்குப் பயப்படுகிறவர்கள் எதிர்காலத்தில் என்ன சூழ்நிலைகள் வந்தாலும் எதிர்கொள்ள முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் என்பதை அறிந்து, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அவரைத் துதித்து ஆராதனை செய்ய வேண்டும். தேவனின் அன்பு அசாதாரணமானது, அதிசயமானது, மற்றும் நிபந்தனை இல்லாதது. அவர் பிரபஞ்சத்தை உருவாக்கியவரும் நம்முடன் எப்பொழுதும் இருக்கிற முக்கியமான தந்தையுமாவார். இவைகளை தமது வார்த்தையின் மூலம் நமக்கு உறுதியளிக்கிறார். உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருப்பினும், தேவனுக்குப் பயப்படுபவர்களை அவர் நினைவில் வைத்துக்கொள்ளுகிறார். அவர் நம்மைப் பற்றி அறிந்திருக்கிறார், நம்மைக் கவனித்துக்கொள்கிறார் என்று அவர் சொல்வது நம் வாழ்க்கையில் கேட்கக் கூடிய சிறந்த செய்தியாகும். இந்த பகுதியின்படி தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? நீதிமொழிகள் 19:23 கூறுகிறது: “கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.”
Comments
Post a Comment